++ பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 06.09.19 ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::
பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
திருக்குறள்


அதிகாரம்:கூடாவொழுக்கம்

திருக்குறள்:274

தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.

விளக்கம்:

புதரில் மறைந்து கொண்டு வேடன் பறவைகளைக் கண்ணி வைத்துப் பிடிப்பதற்கும், தவக்கோலத்தில் இருப்பவர்கள் தகாத செயல்களில் ஈடுபடுவதற்கும் வேறுபாடு இல்லை.

பழமொழி

All his geese are swans.

 காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.

இரண்டொழுக்க பண்புகள்

1. அமைதி நம் அறிவை வளர்ப்பது மட்டும் அல்ல நாம் ஆழ்ந்து சிந்திக்க நம்மை தூண்டும்.

2. எனவே தேவையில்லாத பேச்சை குறைத்து அமைதி காக்க முயல்வேன்.

பொன்மொழி

ஆக்கமும் அழிவும் இரு நிலைகள். இதன் ஆற்றல் எங்கு நிலைத்து ஓங்குகிறதோ அங்கு அவற்றின் தன்மை பிரதிபலிக்கின்றது...

விவேகானந்தர்

பொது அறிவு

1.எத்தனால் ஆல் இயங்கும் இரு சக்கர வாகனத்தை  இந்தியாவில் முதன்முதலில் தயாரித்துள்ள நிறுவனம் எது?

டிவிஎஸ் நிறுவனம் (அப்பாச்சி ஆர் டி ஆர் 200 Fi E100)

2.ஆஸ்கர் விருது பெற்ற இரண்டாவது   தமிழர் யார்?

காட்டலாங்கோ லியோன்- தூத்துக்குடியை சேர்ந்தவர் கோவை அரசு பள்ளியில் படித்தவர் (2016 சினிமா தொழில்நுட்பத்திற்கான ஆஸ்கர் விருது)

English words & meanings

Jute - a long, soft and shiny plant gives jute
சணல் செடி - சணல் எனும் இழையைத் தரும் செடி.
சணல் ஆடை, பைகள், கோணிப் பைகள் போன்றவை களை தயாரிக்க உதவுகிறது.

Junction - a point where 2 or 3 objects meet.
சாலை, மனிதர்கள், தொடர் வண்டிகள் சந்திக்கும் இடம். சந்திப்பு.

ஆரோக்ய வாழ்வு

வெந்தயக் கீரையை வேகவைத்து வெண்ணெயில் வதக்கிச் சாப்பிட்டால் பித்தத்தினால் வரும் மயக்கம் சரியாகும்.

Some important  abbreviations for students

* A.M - Arithmetic mean

* G.M - Geometric mean

நீதிக்கதை

பிச்சைக்காரனும் தங்க நாணயமும்

ஒரு ஊரில் பிச்சைக்காரன் ஒருவன் வீடு வீடாக உணவுக்காக அலைந்தான். அவன் மிகவும் அசிங்கமாக, கிழிந்த உடைகளோடு இருந்தான். ஒரு பழைய கோணிப்பையே அவனுக்கு உடமையாக இருந்தது. ஒவ்வொரு வீடாகப்போய் பார்த்து விட்டு எதுவும் கிடைக்காவிட்டால் அந்த வீட்டின் முன்னே போய் நின்று வீடு மிகப் பெரியது, ஆனால் இங்குள்ளவர்களுக்குப் பணம் நிறைய இருந்தும் இன்னும் அதிகமாகவே எதிர்பார்க்கிறார்கள். கடைசியில் எல்லாவற்றையும் இழப்பார்கள் என்று சொன்னான்.

இன்னொரு வீட்டுக்குப் போனான். உணவு கிடைக்கவிலை. இந்த வீட்டில் உள்ளவன் கோடீஸ்வரன். ஆனால் இருக்கிற பணத்தில் திருப்தியடையாமல் சூதாடினான். கடைசியில் எல்லாவற்றையும் இழந்தான். எனக்கோ கொஞ்சப் பணம் கிடைத்தால் போதும். திருப்தி கொள்வேன். அதிக ஆசைப்படமாட்டேன்! என்று அந்த பிச்சைக்காரன் சொன்னதும் அதிர்ஷ்ட தேவதை அவன் முன்னே தோன்றியது.

நான் உனக்கு தங்க நாணயங்கள் கொடுத்து உதவுகிறேன் என்றது தேவதை. பிச்சைக்காரன் உடனே அவன் கோணிப்பையை விரித்தான். அப்போது அதிர்ஷ்ட தேவதை கோணிப்பைக்குள் விழுகின்ற நாணயங்கள் தங்கமாக இருக்கும். அவை நிலத்தில் விழுந்தால் தூசியாகிவிடும் என்று சொல்லியது. பிச்சைக்காரன் மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தான். அதிர்ஷ்ட தேவதை கோணிப்பை நிரம்பியதும் தங்க நாணயங்களைக் கொட்டுவதை நிறுத்தியது.

உன் கோணிப்பையில் இருக்கிற நாணயங்கள் உன்னை அரசனை விட பணக்காரனாக்கும். அது போதும்தானே? என்றது அதிர்ஷ்ட தேவதை. போதாது. இன்னும் வேண்டும் என்றான் பிச்சைக்காரன். அதிர்ஷ்ட தேவதை மேலும் சில தங்க நாணயங்களைக் கொடுத்துவிட்டு, உன் கோணிப்பை இதற்கு மேல் தாங்காது என்றது. பிச்சைக்காரன் இன்னும் கொஞ்சம் வேண்டும் என்றான். அதிர்ஷ்ட தேவதை மேலும் தங்க நாணயங்கள் கொடுத்தது. மறுவினாடி கோணிப்பை கிழிந்தது. அதனுள் இருந்த நாணயங்கள் கீழே விழுந்து தூசியாகின. அதிர்ஷ்ட தேவதையும் மறைந்தது. பிச்சைக்காரன் திகைத்துப் போய் நின்றான்.

நீதி :
கிடைத்ததை வைத்து வாழவேண்டும். பேராசைப்பட்டால் உள்ளதும் போய்விடும்.

வெள்ளி

சமூகவியல்& விளையாட்டு

 விமானம் விண்ணில் பறக்கும் போது விபத்து நேர்ந்தால் அதை பற்றி அறிய முதலில் கண்டுபிடித்து எடுக்கும் கருவி விமான  தகவல் பேழை .இதனை ஆங்கிலத்தில் பிளாக் பாக்ஸ் என்று கூறுவர். ஆனால் இது உண்மையில் கருப்பாக இருப்பது இல்லை மஞ்சள் நிறமாகவோ ஆரஞ்சு நிறமாக தான் இருக்கும்.

பாரம்பரிய விளையாட்டு

பாண்டியாட்டம் / நொண்டி

சிறுமிகள் தெருக்களில் விளையாடும் விளையாட்டு இது. ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டிருக்கும் எட்டு தொடர் பெட்டியை தரையில் வரைந்து கொள்ள வேண்டும். போட்டியாளர்கள் முதல் பெட்டியில் கல்லை போட்டு அந்த பெட்டியையும் கோடுகளையும் தொடாமல் நொண்டி அடித்து கடைசி பெட்டி வரை சென்று திரும்ப வர வேண்டும். பெரும்பாலும் அனைத்து சிறுமிகளும் விளையாடும் மிக பிரபலமான விளையாட்டு இது. ஆனால் தற்போது உள்ள வாழ்க்கை முறை கிராமங்களில் கூட இதை கடினம் ஆக்குகிறது.
பயன் :
கால் மற்றும் தசைகள் வலிமை பெறும்.

*இன்றைய செய்திகள்*

06.09.2019

☘நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்குவதை பிரதமர் மோடியுடன் தமிழக மாணவர்கள் உட்பட 70 பேர் பார்வையிடுகின்றனர். இந்த நிகழ்ச்சி பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்தில் நடக்கின்றது.

☘ தமிழ் நாட்டில் விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் பேனர்கள் வைத்தால் ஒரு வருட சிறைதண்டனை!

☘கர்நாடக அணைகளில் இருந்து மேட்டூர் அணைக்கு திறக்கப்படும் தண்ணீர் அளவு அதிகரிப்பு.

☘இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ‘ஜஸ்பிரித் பும்ரா மேலும் பல ஹாட்ரிக் சாதனை படைப்பார்’ என்று இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் புகழாரம் சூட்டியுள்ளார்.

☘பெங்களூரு: புரோ கபடி லீக் தொடரில் போட்டி முடிய சில வினாடிகள் இருந்த போது, டில்லி அணி முன்னிலை பெற்று வெற்றி பெற்றது.

Today's Headlines

🌸70 persons including students of Tamil Nadu along with Prime minister Modi  watch Vikram's landing on the land.  This event is being held at the ISRO Center in Bangalore.

🌸 In Tamil Nadu if the people   keep the banners against the rule they will be punished with one year prison.

🌸The water level which is released  from Karnataka to Mettur Dam is increased.

🌸Indian fast bowler 'Jasprit Bumrah' will record more hat-trick says former Indian fast bowler Irfan Pathan.

🌸In Bangalore Pro Kabadi League series in the last second Delhi team led and won the match

Prepared by
Covai women ICT_போதிமரம்

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...