NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பான் - ஆதார் இணைத்து விட்டீர்களா? தெரிந்து கொள்ள இதைச் செய்யுங்க! இணைக்கா விட்டால். கார்டு காலாவதிதான்!

IMG_ORG_1569701646324


ஆதார் எண் - பான் எண்னை இணைப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இணைய பக்கம்
பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இணைக்காவிட்டால் 3 நாட்களுக்குப் பிறகு, பான் எண் காலாவதியாகிவிடும் என்று கூறப்படுகிறது.பெர்மெனண்ட் அக்கவுண்ட் நம்பர் எனப்படும், நிரந்தரக் கணக்கு எண் ஒருவரது அனைத்து விதமான நிதிப் பரிமாற்றங்களையும் பதிவு செய்யும் விதத்தில் அமைக்கப் பட்டுள்ளது. ஆனால் சிலர் வணிக ரீதியாக வரிகளில் இருந்து தப்பிக்கும் பொருட்டும், சிலர் அது ஏதோ கிரெடிட் கார்டு போலானது என்ற அறியாமையிலும் இரண்டு மூன்று கார்டுகளுக்கு மேல் பெற்று, ஏமாற்றியும் வருகின்றனர். இந்நிலையில், ஒரு பான் கார்டுடன் ஒருவரது ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
IMG_ORG_1569701655435

இதன் மூலம், ஒருவர், ஒரு கணக்கு, ஒரு பான் கார்டு, ஒரு ஆதார் எனக் கொண்டுவந்தால், முறைகேடுகள் தடுக்கப் படும் என்று கூறுகிறது.
எனவே இந்த இரண்டு கார்டுகளையும் மத்திய நேரடி வரிகள் விதிப்பின் வருமான வரி இணையத்தில் அனைவரும் இணைக்க வேண்டும் என்று கெடு கொடுத்து வந்தது. இந்தக் கெடு சில முறை நீட்டிக்கப் பட்டும் வந்தது.
இந்நிலையில் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் பான் கார்டுடன் ஆதார் எண் இணைக்கப்படாவிட்டால், அக்டோபர் 1ஆம் தேதி முதல் பான் கார்டு செல்லுபடி ஆகாது என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் எச்சரித்துள்ளது. அதன் பிறகு பழைய கார்டு காலாவதியாகி, புதிதாக ஒரே ஒரு பான் கார்டுதான் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள முடியும்.
வங்கியில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பண பரிவர்த்தனை மேற்கொள்ள பான் கார்டு அவசியம். பணப் பரிவர்த்தனை செயல்பாட்டை மேலும் ஒருங்கிணைத்து, ஒன்றுபட்ட கணக்காகக் கொண்டு வர, பான் கார்டுடன் ஆதார் எண் இணைக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது. இதுகுறித்து மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததால் பெரும்பாலானோர் ஆதார் எண்ணை இணைக்கத் தவறினர். கால அவகாசம் நீட்டிக்கப் படும் பலர் அதில் ஆர்வம் இல்லாமல் இருந்தனர். இருப்பினும், இதற்கு மேலும் கால அவகாசம் நீட்டிக்கப் பட வாய்ப்பில்லை என்பதால், வரும் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் ஆதார் எண் இணைக்கப்படாத பான் கார்டு காலாவதியாகிவிடும் என்று எச்சரிக்கப் பட்டுள்ளது.
இது கடந்த இரு வருடங்களுக்கும் மேலாக சொல்லப் பட்டு வருவதால், சிலர் தங்கள் பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைத்திருப்பார்கள். அவர்கள் தற்போது தங்கள் பான் எண், ஆதாருடன் இணைக்கப் பட்டு விட்டதா என்பதை எப்படி தெரிந்து கொள்வது..?
IMG_ORG_1569701695384

பான் கார்டுடன் ஆதாரை இணைப்பது எப்படி?
https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/LinkAadhaarHome.html?lang=eng - என்ற வருமானவரித்துறையின் இணையப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள்.
இதில் பான், ஆதார் எண், ஆதாரில் உங்களின் பெயர், கேப்ட்சா ஆகியவற்றைப் பூர்த்தி செய்யுங்கள்.
தொடர்ந்து, Link Aadhaar என்னும் பட்டனை க்ளிக் செய்யுங்கள்.
இதை அடுத்து உங்கள் ஆதார் எண், பான் கார்டுடன் இணைக்கப்பட்டுவிடும். அதற்கான செய்தியும் அதில் வந்துவிடும்.நீங்கள் ஏற்கெனவே இரண்டையும் இணைத்திருந்தால், இந்தப் பக்கத்திலேயே மேல் புறத்தில் அதற்கான செய்தி வரும். அதன்மூலம் நீங்கள் ஆதார் - பான் கார்டை இணைத்துவிட்டதை அறிந்துகொள்ளலாம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive