NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 10.09.19

திருக்குறள்


அதிகாரம்:கூடாவொழுக்கம்

திருக்குறள்:277

புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
முக்கிற் கரியார் உடைத்து.

விளக்கம்:

குன்றிமணியின் மேனியைப் போல் வெளித் தோற்றத்தில் நல்லவராயும், குன்றிமணியின் மூக்கு கறுத்து இருப்பதுபோல் மனத்தால் கரியவராகவும் வாழ்வோர் இவ்வுலகில் இருக்கவே செய்கின்றனர்.

பழமொழி

Lay things by, they may come to use.

 சிறு துரும்பும் பல் குத்த உதவும்

இரண்டொழுக்க பண்புகள்

1. எனது இருப்பிடம் மற்றும் தெரு சுத்தமாக இருக்க முயல்வேன். எனது சுற்றத்தார் தெருவில் இருப்போரும் அவ்வாறு இருக்க வலியுறுத்துவேன்.

2. தூய்மை பாரதத்திற்கு என்னால் இயன்றதைச் செய்வேன்.

பொன்மொழி

தொல்லைகளும்,பிரச்சனைகளும் இல்லை என்றால் உழைப்பும் வெற்றியும் நம்மை நெருங்காது...

டாக்டர். கலாம்

பொது அறிவு

1. உலகிலேயே மிக ஆழமான ஏரி எது?

பைகால் ஏரி- மாஸ்கோ

2.மிக நீண்டதூரம் செல்லும் ரயில் எது?

டிரான்ஸ் சைபீரியன் எக்ஸ்பிரஸ் -- மாஸ்கோ

English words & meanings

* Mammals - animals which gives milk to their young ones.
பாலூட்டிகள். வெப்ப இரத்த பிராணிகள். இவைகள் தங்கள் உடல் வெப்பத்தை தங்கள் முடி மூலம் ஒரே சீராக வைத்துக் கொள்ளும்

* Materials - matter from which other objects made
ம‌ற்ற பொருட்களை உருவாக்கும் மூலப்பொருள்

ஆரோக்ய வாழ்வு

தசைகளுக்குப் பலம் சேர்ப்பதற்கும், கண்பார்வை தெளிவாய்த் தெரிவதற்கும் ரிபோபிளேவின் என்ற வைட்டமின் பி2ம்,தலைவலி, தோல் நோய் முதலியவற்றைக் குணப்படுத்தி மனநல வளத்தை அதிகரிக்கும் 'பி'குரூப்பைச்  சேர்ந்த வைட்டமின் நியாசினும் மணத்தக்காளிக் கீரையில் அதிகம் உள்ளன.

Some important  abbreviations for students

* SOS - Save Our Souls

* TTE- Travelling Ticket Examiner

நீதிக்கதை

முரட்டு ஆடு

ஒரு மலையடிவாரம் பகுதியில் சின்னஞ்சிறு வீடுகள் இருந்தன. அங்கு வாழும் மக்கள் தங்களது பிழைப்புக்காக ஆடு, மாடு இன்னும் பிற கால்நடைகளை வளர்த்து வந்தனர். அதன் அருகே அழகிய ஆறு ஓடிக்கொண்டிருந்தது. அதனால், அங்கே மலையடிவாரத்தில் பச்சைப்பசேல் என்று புல் வளர்ந்திருந்தது.

அவர்கள் வளர்க்கும் ஆடுகள் மலையடிவாரத்தில் வளர்ந்துள்ள புல்லைத் தின்ன அங்கே மேய வரும். மாடுகளால் சரிவில் நிற்க முடியாததால் அவைகள் அங்கு வருவதில்லை. அங்கே ஒரு முரட்டு ஆடு இருந்தது. கொம்புகள் இரண்டும் வளர்ந்து முறுக்கிக் கொண்டு நின்றன. அது மேய்ந்து கொண்டிருக்கும் இடத்தின் அருகே வேறு ஆடுகள் வந்து விட்டால் அவைகளை முட்டி தூர விரட்டி விடும்.

ஒரு நாள் ஆற்றின் கரையோரம் மேய்ந்து கொண்டிருந்த ஆடு ஒன்று ஆற்றினோரம் வந்த முதலையைப் பார்த்து பயந்து தப்பி ஓடி முரட்டு ஆடு மேய்ந்து கொண்டிருந்த இடத்தின் அருகே வந்து விட்டது. முரட்டு ஆடு ஓடி வந்த ஆட்டைப் பார்த்து, நான் மேய்ந்து கொண்டிருக்கும் இடத்திற்கு நீ எப்படி வரலாம் என்று கோபமாகக் கேட்டது. அதற்கு அந்த ஆடு, அங்கே முதலையைப் பார்த்தேன். அதனால் வேகமாக ஓடி வந்து விட்டேன் என்று அமைதியாக சொன்னது.

முரட்டு ஆடோ, அது சொன்னதைக் கேட்கவில்லை. ஓடி வந்த அந்த ஆட்டுடன் சண்டைப்போட ஆரம்பித்தது. அந்த ஆடோ சமாதானமாகவே பேசியும், முரட்டு ஆடு கேட்கவில்லை. வேறு வழியின்றி அந்த ஆடு முரட்டு ஆட்டுடன் எதிர்த்து நின்று சண்டையிட்டது.

மலைச்சரிவான பகுதியில் இரண்டு ஆடுகளும் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் பொழுது முரட்டு ஆடு கால் சறுக்கி ஆற்றில் விழுந்தது. ஆற்றின் கரையோரம் வாயைப் பிளந்து கொண்டு காத்திருந்த முதலை அந்த முரட்டு ஆட்டை கவ்விக்கொண்டு ஆற்றுக்குள் சென்றுவிட்டது.

நீதி :
தான்தான் பெரியவன் தனக்குதான் எல்லாம் தெரியும் என்ற ஆணவம், திமிரு இருந்தால் நஷ்டம் நமக்கே.

செவ்வாய்

English & ART

1. A sentence is a set of words with a subject and

 an object
 a predicate

2. The subject of a sentence is

 what it's about
 what it begins with

3. The predicate is what's said about

 the subject
 the beginning

4. "My dog likes to chase cats." The predicate is

 likes to chase cats
 chase cats

5. The predicate of a sentence always includes

 a noun
 a verb

ART - 38

கலையும் கைவண்ணமும் காண இங்கே கிளிக் செய்யவும்



இன்றைய செய்திகள்

10.09.2019

* ரயில்வே துறை சார்ந்த தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடத்தலாம் என்று ரயில்வே வாரியம் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது.

* பிபார்ம், பிஎஸ்சி நர்சிங் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்க உள்ளது. அதில் பங்கேற்க 15,536 மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

* வெள்ள பாதிப்பு அதிகம் ஏற்படும் பெருங்குடி மண்டலத்தில், மழை நீர் சேகரிப்பு திட்டம் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக, மண்டலம் முழுவதும், நன்கொடையாளர்கள் உதவியுடன், 1,000 மழை நீர் சேகரிப்பு உறை கிணறுகள் அமைக்கும் பணிகள், துரிதகதியில் நடந்து வருகின்றன.

* வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.

* கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் 19வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.

Today's Headlines

* The Railway Board has concluded to conduct exams in Tamil and other languages.

* Counselling for para medical courses including B.Pharm, BSc Nursing is to commence from today. 15,536 students have been invited to participate.

* The rainwater harvesting program has been intensified in flood prone areas. For this purpose, work on the construction of 1,000 rainwater harvesting wells across the Perungudi region, with the help of donors, is underway.

* Afghanistan won by 224 runs in a Test match against Bangladesh.

* Spaniard Rafael Nadal clinched the title for the 19th time at the US Open tennis tournament in one of the Grand Slam matches.

Prepared by

  • Covai women ICT_போதிமரம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive