இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர்.இராதாகிருஷ்ணன் பிறந்த தினம் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் அனைவரும் தங்களது ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்துவதும், அவர்களிடம் ஆசிபெறுவதும் வழக்கம்.
சென்னையில் உள்ள மாநில கல்லூரியில் சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்னர் பணியாற்றிய பேராசிரியரை விருந்தினராக அழைத்து ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. சுமார் 180 ஆண்டுகள் பழமையான மாநில கல்லூரியில் 1940 களில் பணியாற்றிய பேராசிரியர் பார்த்தசாரதி இன்று மீண்டும் கல்லூரிக்கு வந்து மாணவிகளுடன் கலந்துரையாடினார். கல்லூரி பேராசிரியர்களும் மாணவிகளும் அவருடன் இணைந்து கேக் வெட்டி ஆசிரியர் தினத்தை கொண்டாடினர்.

103 வயதை கடந்துவிட்டபோதும் பேராசிரியர் பார்த்தசாரதி மாணவிகளுடன் கலந்துரையாடியது அனைவரையும் நெகிழவைத்தது.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Categories

Blog Archive

Total Pageviews

Popular Posts

Recent Comments