NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு 10 வயது சிறுவன் கடிதம்

சந்திரயான் - 2ல் இருந்து பிரிந்து சென்ற, &'லேண்டர்&' எனப்படும் தரையிறங்கி ஆய்வு செய்யும் சாதனம், நிலவில் தரை இறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன், பூமியுடனான தகவல் தொடர்பை இழந்தது.இந்நிலையில், லேண்டர், நிலவின் மேற்பரப்பில் தரை இறங்கி இருக்கும் புகைப்படத்தை, &'ஆர்பிட்டர்&' எனப்படும் நிலவை சுற்றி வரும் சாதனம், நேற்று முன் தினம் வெளியிட்டது.லேண்டரின் நிலை குறித்தும், தகவல் தொடர்பை மீண்டும் செயல்படுத்தவும், இஸ்ரோ எனப்படும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள், கடும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.இந்நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்தும் வகையில், ஆஞ்சநேயா கவுல் என்ற, 10 வயது சிறுவன், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தன் கைப்பட கடிதம் ஒன்றை எழுதி உள்ளான்.&'நன்றியுள்ள இந்தியனின் உணர்வுகள்&' என, தலைப்பிடப்பட்டுள்ள இந்த கடிதத்தை, அச்சிறுவனின் தாய், &'டுவிட்டர்&' சமூக வலைதளத்தில் பகிர்ந்தார்.அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: லேண்டர், திட்டமிட்டபடி, நிலவில் தரை இறங்காமல் போனதற்காக, மனம் தளர வேண்டாம்.
அடுத்த ஆண்டு ஜூனில், சந்திரயான் - 3 விண்கலத்தை ஏவும் பணிகளில், இஸ்ரோ விஞ்ஞானிகள் கவனம் செலுத்த வேண்டும். அதில் நிச்சயம் வெற்றி பெறுவோம். &'ஆர்பிட்டர்&' இன்னும் செயல்பாட்டில் உள்ளதை, நாம் மறந்துவிடக்கூடாது. விரைவில், அதிலிருந்து நிலவின் புகைப்படங்களை, நாம் பெறலாம்.எனவே, வெற்றி இன்னும், நம் கைகளில் தான் உள்ளது. இஸ்ரோ விஞ்ஞானிகள், அடுத்த தலைமுறையினரின் உத்வேகம். நீங்கள் தான் எங்கள் பெருமை. இந்த நாடே நன்றிக் கடன்பட்டுள்ளது. உங்களுக்கு உணர்வுப்பூர்வ இந்தியர்களின், இதயபூர்வ நன்றி. இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.சமூக வலைதளத்தில், பகிரப்பட்ட இந்த கடிதம், பல்வேறு தரப்பில் இருந்தும், பாராட்டுக்களை குவித்து வருகிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive