பள்ளிக் கல்வித் துறை சார்பில் சென்னையில் நாளை நடக்க உள்ள ஆசிரியர் தின விழாவில் 377 நல்லாசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப் படுகிறது.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி எஸ்.ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்.5-ம் தேதி ஆண்டு தோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழக அளவில் சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து ‘டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது’ வழங்கி தமிழக அரசு கவுரவித்து வருகிறது.
அதன்படி இந்த ஆண் டுக்கான நல்லாசிரியர் விருதுக்கு 377 பேர் தேர்வாகி உள்ளனர்.பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆசிரியர் தின விழா சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நாளை (செப்.5) நடைபெற உள்ளது. இந்த விழாவில்அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 165 ஆசி ரியர்கள், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 165, தனியார் பள்ளி களில் 32, ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் 2, மாற்றுத்திறன் ஆசி ரியர்கள் 3, மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்தில் 10 பேராசிரியர்கள் என377 பேருக்கு விருது வழங்கப்பட உள்ளது.
விருதுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் வழங்குகிறார்.டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது ரூ.10 ஆயிரம் ரொக்கம், 36.5 கிராம் எடையுள்ள வெள்ளிப் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற் றைக் கொண்டதாகும். இந்த விழா வில் பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், இயக்கு நர் எஸ்.கண்ணப்பன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
இதற்கிடையே, விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள ஆசிரியர் கள் மீது புகார், குற்றவியல் நட வடிக்கை ஏதும்நிலுவையில் இல்லை என்பதை உறுதிசெய்து, விருது பெறுவதற்கான அழைப்புக் கடிதத்தை வழங்க வேண்டும் என முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...