AKS(Alert Knowledge Services) என்ற உலகளாவிய தன்னார்வ அமைப்பின் சார்பாக, நேற்று புதுடெல்லியில் நடைபெற்ற மிகப் பிரமாண்டமான விழாவில் 68 நாடுகளைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு GLOBAL TEACHER AWARD வழங்கி கௌரவித்தது.
14 ஆண்டுகால என்னுடைய கற்பித்தல் செயல்பாடுகளை பாராட்டி GLOBAL TEACHER AWARD வழங்கியது மிகவும் மகிழ்ச்சியான தருணம்.
இந்த விருதானது, எனதருமை மாணவச் செல்வங்களால்தான் எனக்கு கிடைத்துள்ளது.
மாணவச் செல்வங்களுடன் சேர்ந்து இந்த விருதினை பகிர்ந்து கொள்கிறேன்.
இந்த மகிழ்வான தருணத்தில், எனது செயல்பாடுகளுக்கு உறுதுணையாக இருக்கும் எனது குடும்பத்தாருக்கும், முழு ஒத்துழைப்பு வழங்கும் எனது பள்ளி தலைமை ஆசிரியை அவர்களுக்கும், என்னை ஒவ்வொரு நிலையிலும் ஊக்கப்படுத்தி வாழ்த்திய அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...