நடப்பு நிதியாண்டில் இ.பி.எப். எனப்படும் தொழிலாளர்களுக்கான
வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி 8.65 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது அரசு
அறிவிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி
திட்டத்தில் உள்ளவர்களுக்கு அவர்கள் கணக்கில் வரவு வைக்கப்படும் தொகைக்கு
ஆண்டுதோறும் வட்டி வழங்கப்படுகிறது. அரசு மற்றும் தனியார் துறைகளில்
பணிபுரியும் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிடிக்கப்படும் பி.எப். தொகை
ஓய்வு பெற்ற பின் அவர்களுக்கு வழங்கப்படும்.டில்லியில் பிப். 21ல் நடந்த
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலக அறக்கட்டளை வாரிய கூட்டத்தில்
பி.எப். தொகைக்கான வட்டியை 8.55ல் இருந்து 8.65 சதவீதமாக உயர்த்த முடிவு
செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்தபின் இந்த வட்டி
உயர்வு அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது.மத்திய தொழிலாளர் நலத்துறை
அமைச்சர் கங்வார் இரண்டு நாட்களுக்கு முன் டில்லியில் கூறுகையில்
'பி.எப்.வட்டியை 8.55 சதவீதத்திலிருந்து 8.65 சதவீதமாக உயர்த்த மத்திய
நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்துவிட்டது; அதனால் இந்த வட்டி உயர்வு அமலுக்கு
வருகிறது' என்றார்.இந்நிலையில் வட்டி உயர்வு பற்றிய அறிவிப்பு அரசு
அறிவிக்கையில் நேற்று வெளியிடப்பட்டது.மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம்
வெளிட்ட அறிவிக்கையில் 'பி.எப். சந்தாதாரர்களின் கணக்கில் உள்ள பணத்துக்கு
இனி 8.65 சதவீத வட்டி செலுத்தப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» பி.எப்., வட்டி 8.65 சதவீதமாக உயர்வு அரசு அறிவிக்கையில் வெளியீடு
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...