வாஷிங்டன்: நாசாவின் லூனார் ரீகனயசன்ஸ் ஆர்பிட்டர் இன்று விக்ரம் லேண்டர் தரையிறங்கிய பகுதிக்கு மேல் சுற்றி வந்து லேண்டரை புகைப்படம் எடுக்க நாசா முயற்சிக்கிறது. 4 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நிலவுக்கு சந்திரயான் 2 விண்கலத்தை கடந்த ஜூலை மாதம் 22-ஆம் தேதி இஸ்ரோ அனுப்பியது. 40 நாட்கள் கழித்து சந்திரயான் 2 விண்கலத்தை சுற்று வட்ட பாதையில் நிலைநிறுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் கட்டளைகளை பிறப்பித்தனர்.லேண்டர் தரையிறங்கல் அற்புத நிகழ்வு இந்த மாதம் முதல் வாரத்தில் ஆர்பிட்டரிலிருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்தது. இது வெற்றிக்கரமாக நிகழ்ந்தது.
இந்த நிலையில் நிலவில் லேண்டர் தரையிறங்கும் நிகழ்வு கடந்த 7-ஆம் தேதி அதிகாலை நிகழ்ந்தது. இந்த அற்புத நிகழ்வை காண இந்தியாவே தூங்காமல் விழித்திருந்தது.லேண்டர் புகைப்படம் இந்த நிலையில் லேண்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டதால் அங்கு என்ன நிகழ்கிறது என்பது விஞ்ஞானிகளுக்கு தெரியவில்லை.
இதையடுத்து நிலவின் வட்டபாதையில் சுற்றி வரும் ஆர்பிட்டரானது லேண்டர் நிலவில் தரையிறங்கியதையும் பக்கவாட்டில் விழுந்திருப்பதையும் புகைப்படமாக எடுத்து அனுப்பியுள்ளது.லேண்டருடனான தொடர்பு லேண்டரை தேடும் முயற்சி இதையடுத்து லேண்டருடனான தொடர்பை பெற இஸ்ரோ விஞ்ஞானிகள் முயற்சித்து வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக நாசா விஞ்ஞானிகளும் அப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்னும் 4 நாட்களுக்குள் நிலவில் இருள் சூழ்ந்துவிடும் என்பதால் லேண்டரை தேடும் முயற்சி தீவிரமடைந்துள்ளது.
நாசா விஞ்ஞானிகள் இந்த நிலையில் விக்ரம் லேண்டர் குறித்த புகைப்படங்களை அனுப்ப நாசாவின் லூனார் ரீகனயசன்ஸ் ஆர்பிட்டர் களம் இறக்கி விடப்பட்டுள்ளது. இந்த ஆர்பிட்டர் இன்று விக்ரம் லேன்டர் விழுந்து கிடக்கும் பகுதிக்கு மேல் வலம் வந்து அதை புகைப்படம் எடுக்கவுள்ளது. நாசாவின் ரீகனயசன்ஸ் ஆர்பிட்டர் கடந்த 2009-ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் நிலவின் சுற்று வட்டப்பாதையில் சுற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...