Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நல்லாசிரியர் விருது தொகையை புரவலர் திட்டத்திற்கு அளித்த நல்லாசிரியர்

20190914073038

2018 - 2019 ஆம் கல்வி ஆண்டிற்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை என் பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி சி. செ.முத்துலட்சுமி அவர்கள் ஆசிரியர் தினத்தன்று பெற்றார்.

பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவில்"எனக்கு இந்த விருது கிடைப்பதற்கு முழுமுதற் காரணம் நான் பணியாற்றும் இந்த பள்ளியும் என்னுடன் பணிபுரியும் ஆசிரிய பெருமக்களும் எங்கள் பள்ளியின் அன்பு குழந்தைச் செல்வங்களும் காரணம்" என்று உவகை பொங்க கூறினார்.

எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக இந்த விருது தொகை ரூ_10000 பள்ளியின் முன்னேற்றத்திற்கு மட்டுமே உதவ வேண்டும் என்ற நோக்கில் பள்ளியின் புரவலர் திட்டத்திற்கு ரூபாய் 10000 இன்முகத்தோடு அளித்துள்ளார்.

தான் பெற்ற விருதும் பள்ளிக்கு பெருமை சேர்த்த என் பள்ளியின் தலைமையாசிரியர் தான் பெற்ற விருது தொகையை எம் பள்ளிக்கு அளித்து தான் ஒரு சிறந்த நல்லாசிரியர் என்பதை மறுபடியும் ஒரு முறை நிரூபித்து உள்ளார்.

அவருக்கு பள்ளி குழந்தைகளின் சார்பாகவும்பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பாகவும் பள்ளி மேலாண்மை குழு சார்பாகவும் இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive