NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு பள்ளிகளில் நடனம், கதை மூலம் மாணவர்களுக்கு பாடங்களை கற்பித்து அசத்தும் ஆசிரியர்கள்

நாகையில் முதல்முறையாக அரசு பள்ளிகளில் நடனம், கதை மூலம் மாணவர்களுக்கு பாடங்களை கற்பித்து ஆசிரியர்கள் அசத்துகின்றனர். தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளில் கதை சொல்லி பாடத்திட்டங்களை மாணவ, மாணவிகளிடம் நடத்தி நற்பண்புகளை வளர்க்க இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாடு தொடக்க கல்வித்துறை முன்வந்துள்ளது. இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் தொடக்க கல்வித்துறை இதைதொடங்கியுள்ளது. 1 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள எல்லா பாடங்களுக்கும் கதை வாயிலாக பாடம் சொல்லி தரப்படுகிறது. கணித பாடத்தில் எப்படி கதை சொல்ல முடியும் என்று நினைக்கலாம். ஆனால் அதற்கு உதாரணமாக ஒரு ஆசிரியர் தந்தை போலவும், மற்றொரு ஆசிரியர் மகன் போலவும், மற்றொரு ஆசிரியர் கடை நடத்துவது போலவும் ஏற்பாடு செய்கின்றனர்.

இதில் தந்தை தனது மகனை அழைத்து 10 கொடுத்து அருகில் உள்ள கடையில் 2க்கு பொருட்களை வாங்கி வரும்படி கூறுகிறார்.

உடனே மகன் அந்த கடைக்கு சென்று 2க்கு பொருட்களை வாங்கி கொண்டு மீதம் ₹8 வாங்குவதற்கு பதிலாக 5 பெற்று வந்து தந்தையிடம் தருகிறார்.
உடனே தந்தை, தனது மகனை அழைத்து நான் உன்னிடம் 10 கொடுத்தேன். அதில் ₹2க்கு பொருட்கள் வாங்கினால் மீதம் 8 வாங்கி வரவேண்டும். ஆனால் நீ ₹5 தான் வாங்கி வந்துள்ளாய். எனவே எஞ்சியுள்ள ₹3 கடைக்கு சென்று பெற்று வா என்று கூறுகிறார். அவரும் அந்த கடைக்கு சென்று ஏற்கனவே வாங்க வேண்டிய 3 பெற்று வருகிறார்.இவ்வாறு கணித பாடத்தையும் கதை வாயிலாக கற்று வருகின்றனர். இவ்வாறு தமிழகத்தில் 555 ஆசிரியர்களுக்கு சென்னையில் பயிற்சி அளிக்கப்பட்டு, அங்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்களை சம்பந்தப்பட்ட மாவட்டத்திற்கு அனுப்பி வைப்பது. சென்னையில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தங்களது மாவட்டத்திற்கு வந்தவுடன் மாவட்டத்தில் ஒரு ஒன்றியத்திற்கு 3 அல்லது 4 ஆசிரியர்கள் வீதம் தேர்வு செய்து பயிற்சி அளிப்பார்கள்.

இங்கு பயிற்சி பெறும் ஆசிரியர்கள் தங்களது பள்ளிக்கு சென்று மற்ற ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள். எல்லா ஆசிரியர்களும் பயிற்சி பெற்ற பின்னர் அதை மாணவர்களுக்கு சொல்லி கொடுப்பார்கள். சென்னையில் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் 10 பேராசிரியர்களை கொண்டு கடந்த ஜீலை மாதம் 30ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி வரை பயிற்சி அளிக்கப்பட்டது. அங்கு பயிற்சி பெற்றவர்கள் தங்களது மாவட்டத்தில் ஆசிரியர்களை தேர்வு செய்து செப்டம்பர் மாதம் 4ம் தேதி பயிற்சியை தொடங்கியுள்ளார்கள். இந்த பயிற்சி தொடர்ச்சியாக 3 நாட்கள் நடைபெறும். இவ்வாறு ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியை செல்போன் வாயிலாக பதிவு செய்து தொடக்க கல்வி துறையின் வாட்ஸ் ஆப் எண்ணில் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு கதை மூலம் பாடம் நடத்துதல் மற்றும் மாணவ, மாணவிகளின் நற்பண்புகளை வளர்த்தல் மாநிலத்தில் முதல் முறையாக நாகை மாவட்டம் காடம்பாடி அரசு நடுநிலைப் பள்ளியில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த பள்ளியில் இருந்து சென்னைக்கு பயிற்சி பெற காடம்பாடி அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் இளமாறன், திருவாரூர் மாவட்ட மேலராதநல்லுார் அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர் மணிமாறன் ஆகியோர் சென்றனர். அங்கு தாங்கள் பெற்ற பயிற்சியை திருவாரூர், நாகை ஆகிய மாவட்டத்தைச் சேர்ந்த 23 அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கற்றுத்தருகின்றனர். இதற்காக பயணப்படி, தினப்படி, உணவு செலவு மற்றும் மதிப்பூதியம் ஆகியவற்றிற்கான மொத்த செலவு 1 லட்சத்து 35 ஆயிரத்து 500 வழங்கப்பட்டுள்ளது. அதே போல் மாவட்ட அளவில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் கருத்தாளர் நபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 300, வெளியில் இருந்து வந்து பயிற்சி அளிப்பவருக்கு 700 மதிப்பூதியம் அளிக்கப்படுகிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive