ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ கிகா ஃபைபர் சேவை இன்று தொடங்கப்படுகிறது. ஜியோ கிகா ஃபைபர் என்றால் என்ன? இது இந்தியத் தொலைத்தொடர்பு துறையில் எத்தகைய தாக்கம் செலுத்தும்? என்று தெரிந்து கொள்வதற்கு முன்பு, அடிப்படையாக ஆப்டிக்கல் ஃபைபர் டெக்னாலஜி குறித்து பார்ப்போம்.
ஆப்டிக்கல் ஃபைபர் டெக்னாலஜி கணினியின் தரவுகளையும், தொலைபேசியின் குறிகைகளையும் (குறிப்பலைகளையும்) ஒளியின் பண்புகளில் மாற்றங்களாக ஏற்றி, நெடுந்தொலைவு கடத்திச் செல்ல இன்று பயன்படுத்த உதவுவது ஆப்டிகல் ஃபைபர் டெக்னாலஜி. ஒளியலைகளின் மீது ஏற்றப்பட்ட செய்தி, அல்லது தரவுக்குறிப்பலைகள், கடலடியே கண்டம் விட்டு கண்டம் தாண்டியும் செலுத்தப் பெறுகின்றன.
ஜியோகிகா ஃபைபர் 100 Mbps டேட்டா வேகத்தை இதன் அனைத்து பயனர்களும் பெற முடியும். மிகவும் எளிமையாக சொல்ல வேண்டுமானால் ஒரு ஜிபி அளவுடைய ஒரு படத்தை ஜியோகிகா ஃபைபர் பயன்படுத்துவோர் அதிகப்பட்சமாக பத்து நிமிடத்தில் தரவிறக்கம் செய்துவிட முடியும். ஜியோ சில ப்ளான்களை வழங்குகிறது. குறிப்பிட்ட அந்த ப்ளான்களுக்கு சந்தா கட்டி இருப்போர், 1gbps சேவையை பெற முடியும்.
குறிப்பாக லைவ் ஸ்ட்ரீம் செய்வதற்கு பயன்படும். இது குறித்து விளக்கும் தொழில்நுட்ப வல்லுநர் செல்வமுரளி, "ஜியோ சந்தைக்கு வருவதற்கு முன்பு நிலைமை எவ்வாறாக இருந்தது. அனைவரும் கட்டுரைகளைத்தானே படித்தோம். அதாவது டெக்ஸ்டுகளைதான் (Text) பார்த்து, படித்து, பகிர்ந்து வந்தோம். ஜியோ வந்தப் பின் டேட்டா குறித்து கவலைப்படாமல் வீடியோக்களை அதிகம் நுகர தொடங்கினோம். அது கைப்பேசியில் ஒரு பெரும் புரட்சியை நிகழ்த்தியது என்றால், இப்போது நிகழ்ந்திருப்பது அடுத்தக்கட்ட பாய்ச்சல்.
அதாவது சர்வ சாதாரணமாக ஓவர் தி டாப் மீடியா வழியாக தொலைக்காட்சிகளில் நாம் ஹாட்ஸ்டார், நெட்ஃப்ளிக்ஸை லைவ் ஸ்ட்ரீம் செய்வோம். இது நாம் தொலைக்காட்சி பார்க்கும் நம் பழக்கத்தில் பெரும் தாக்கம் செலுத்த இருக்கிறது" என்கிறார். ஜியோகிகா ஃபைபர் பெற எவ்வளவு கட்டணம்? முதலில் வைப்பு தொகையாக ரூபாய் 2500 செலுத்த வேண்டும். வைஃபை ரூடர் வழங்கப்படும். அறிமுக சலுகையாக ஹெச்.டி தொலைக்காட்சியை இலவசமாக வழங்க இருக்கிறார்கள்.
எப்படி வாங்குவது? https://gigafiber.jio.com/registration என்ற தளத்தில் பதிவு செய்ய வேண்டும். சில குறிப்பிட்ட பெருநகரங்களுக்கு மட்டுமே முதலில் இந்த சேவை வழங்கப்படும். பின்பு, இந்த சேவை படிப்படியாக அனைத்து ஊர்களுக்கும் விரிவாக்கப்படும். சந்தா எவ்வளவு ? மாத சந்தா மற்றும் வருட சந்தா அடிப்படையில் இந்த சேவை வழங்கப்பட இருக்கிறது. குறைந்தப்பட்ச மாத சந்தா ரூ. 700இல் தொடங்குகிறது என சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வருட சந்தா எவ்வளவு என்று இன்னும் வெளியிடப்படவில்லை.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...