கிருஷ்ணகிரி மாவட்டம், பருகூர் ஒன்றியம்,ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,மரிமானப்பள்ளியில் விதைப்பந்து விழா நடைப்பெற்றது. விழாவிற்கு மதிப்புமிகு வட்டாரக்கல்வி அலுவலர்கள் திரு. சம்பத் அவர்கள்,திரு. பழனிச்சாமி அவர்கள்,திரு. பால்ராஜ் அவர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலக கண்கானிப்பாளர் திரு.தங்கராஜ் அவர்கள்,ஆசிரியர் பயிற்றுனர் திரு. ரமேஷ்குமார் அவர்கள் தலைமையேற்று விழாவை சிறப்பித்தனர். பள்ளி மாணவர்களுக்கு இயற்கையின் மீது பற்றை ஏற்படுத்தவும்,இயற்கையை பாதுகாக்கும் பொறுப்பை உணர்த்தும் நோக்கில் மாணவர்கள்  மரங்களை நடுதல் ,அதை பாதுகாக்கும் வழிமுறைகளை கற்றுத்தருகிறோம்.









அந்த நோக்கத்தில் சென்ற மாதம் முதல்
மரிமானப்பள்ளி ஊ.ஒ.ந.நி.பள்ளி மாணவர்கள் 3,500 விதைப்பந்துகளை தயாரித்துள்ளனர். புங்கை மற்றும் வேம்பு விதைகள் பயன்படுத்தி களிமண் மற்றும் மாட்டுச்சாணம் சேர்த்து விதைப்பந்துகள் தயாரிக்கப்படுகிறது. விதைப்பந்துகள் தயாரிக்கும் முறையை மாணவர்களுக்கு விளக்கி காட்டப்பட்டு, மாணவர்களை விதைப்பந்துகளை  தயாரிக்கின்றனர். பள்ளியின் அருகே உள்ள ஏரியில் விதைப்பந்துகள்  வீசப்பட்டது. விதைப்பந்துகள் மட்டுமின்றி 1300 பனம்பழ கொட்டைகள் ஏரியில் நடப்பட்டது.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Categories

Blog Archive

Total Pageviews

Popular Posts

Recent Comments