வைட்டமின் ஏ, சி, இ ஆகியவை இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை
அதிகரிக்கும் தன்மை வாய்ந்தது. அதுவும் உடலுக்குள் நுழையும் நோய் கிருமிகளை
அழிப்பதில் மிகவும் வலிமை வாய்ந்தது. கேரட், பச்சைக்காய்கறிகள், தக்காளி,
நெல்லிக்காய், சிட்ரஸ் பழங்கள் மற்றும் கொய்யாபழம் ஆகியவற்றில் இந்த
ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் உடலில் நன்மை செய்யும்
பாக்டீரியாக்களுக்கு ப்ரோபயாட்டிக் என்று பெயர். தயிர் மற்றும் பால் போன்ற
பொருட்களில் காணப்படுகிறது. உடலில்நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க பெரிதும்
உதவுகிறது. மேலும் ஹீமோகுளோபின் அதிகளவு சுரக்க மிகவும் உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் தினமும் ஒரு டம்ளர் அளவு
எலுமிச்சை சாறு குடித்து வந்தோம் என்றால், உடலுக்கு நன்மை செய்யும்
பாக்டீரியாக்கள் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது. மேலும் இவற்றின்
அமிலத்தன்மை உடலுக்குள் நுழையும் கெட்ட பாக்டீரியாக்களை அழிக்க உதவுகிறது.
உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அதிகளவு மூலிகைகளை உணவில் சேர்த்து
கொள்ளவேண்டும். மூலிகை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நோய் தொற்றுக்களை
தடுக்கிறது.
மஞ்சள், சோம்பு மற்றும் பூண்டு ஆகியவை நோய் கிருமிகளை எதிர்த்து போராடும்
தன்மை வாந்தது. மேலும் இயற்கை முறையில் விளைவிக்கப்படும் பழங்கள் மற்றும்
காய்கறிகள் ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...