கல்விக் கட்டணம் செலுத்தத் தவறிய மாணவர்களை, வகுப்பறைக்கு வெளியே நிற்க வைக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூரில், தமிழக அரசின் சார்பில் நலத்திட்ட`உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஆயிரத்து 558 பயனாளிகளுக்கு 4 கோடியே 91 லட்சம் ரூபாய் மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டன.
இதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அந்தியூர் வறட்சியான பகுதியாக உள்ளதால், தண்ணீர் பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். அதன்படி, மேட்டூர் வலது கரை, மணியாச்சி பள்ளம், வேத பாறை அணை கட்டும் திட்டம் ஆகியவை குறித்து, ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். கல்விக் கட்டணம் செலுத்தத் தவறிய மாணவர்களுக்கு தண்டனை வழங்கும் கல்வி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் செங்கோட்டையன் எச்சரித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...