பொறியியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களாக பணியாற்ற இனி எம்.இ மற்றும்
எம்.டெக் படித்திருந்தால் மட்டும் போதாது என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி
கவுன்சில் தலைவர் அனில் சஹஸ்ரபுதே தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் தனியார் விடுதியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் இது தொடர்பாக பேசுகையில்,
இனி பொறியியல் கல்லூரிகளில் உதவி பேராசியராக பணியாற்ற எம்.டெக்,எம்.இ படிப்புகள் மட்டும் போதாது. 8 மோட்யுல் கோர்ஸ் எனப்படும் தொழிநுட்ப கல்வியை போதிக்க சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ள ஒரு வருட படிப்பினை முடித்தவர்களே பொறியியல் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்ற முடியும் என கூறியுள்ளார். அடுத்த வருடம் முதல் இந்த நடைமுறை செயலாக்கம்பெறும் எனவும் தெரிவித்துள்ளார்
பிஎஸ்சி படித்தவர்கள் எப்படி பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற எப்படி பிஎட் படிக்க வேண்டுமோ அதேபோல் பொறியியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக இனி அந்த புதிய சிறப்பு படிப்பை முடித்திருக்க வேண்டும் என்றும், பொறியியல் படிக்கும் மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்த மேலும் பல புதிய மாற்றங்கள் கொண்டுவரப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சிறப்பு படிப்பை முடிக்கவில்லை எனில் தற்போது பணியாற்றும் உதவி பேராசிரியர்கள் இணை பேராசிரியர்களாக பதவி உயர்வு வழங்ப்படுவதில் சிக்கல் ஏற்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...