தமிழகம் முழுவதும்,பள்ளிப் படிப்பை கைவிட்ட, மாணவர் பட்டியல் தயார்
செய்யுமாறு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களின் விபரங்கள்
அனைத்தும், மின்னணு முறையில் இணைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், இந்த கல்வி
ஆண்டில், அரசு பள்ளிகளில், அதிக மாணவர்களை சேர்க்க, பள்ளி கல்வி துறை
நடவடிக்கை மேற்கொண்டது. மேலும், அங்கன்வாடிகளில் படிக்கும் குழந்தைகள்,
வேறு தனியார் பள்ளிகளுக்கு செல்லாமல், அவர்களுக்கு, அரசு பள்ளியிலேயே,
மழலையர் வகுப்புகளில் படிக்க வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. அதனால்,
அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை, 60 லட்சம் உயர்ந்துள்ளது. இதற்கிடையில்,
பல பள்ளிகளில், எட்டாம் வகுப்புக்கு மேற்பட்ட மாணவர்கள், மாற்று சான்றிதழ்
வாங்கியுள்ளனர்; அவர்களில் பலர், படிப்பை தொடராமல் உள்ளனர்.சிலர்,
ஐ.டி.ஐ., எனும் தொழில் பழகுனர் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து உள்ளனர்.
இதில், படிப்பை கைவிட்டவர்கள் யார், அதற்கான காரணம் என்னவென்று அறிய,
மத்திய மனிதவள மேம்பாட்டு துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, அனைத்து
மாவட்டங்களிலும், பள்ளிகளில் படிப்பை கைவிட்ட, மாணவர்களின் விபரங்களை
சேகரிக்கும்படி, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வி இயக்குனரகம்
உத்தரவிட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...