தான் இறந்துவிட்டதாகக்கூறி விடுமுறை கேட்ட 8ஆம் வகுப்பு மாணவனின் விண்ணப்பத்துக்கு பள்ளி முதல்வர் ஒப்புதல் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் 8 ஆம் வகுப்பு மாணவன் ஒருவர் தனது பள்ளி முதல்வருக்கு அரை நாள் விடுப்பு வேண்டி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், நான் இன்று காலை 10 மணியளவில் இறந்துவிட்டதால் நான் சீக்கிரம் வீட்டிற்கு செல்லவேண்டியுள்ளதால் எனக்கு அரை நாள் விடுப்பு வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தனது பாட்டி காலமாகிவிட்டார் என்பதற்கு பதில் தான் இறந்துவிட்டதாக அந்த மாணவர் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தவறை கவனிக்காத பள்ளி முதல்வர் மாணவருக்கு விடுப்பளித்து விண்ணப்பத்தில் கையெழுத்திட்டுள்ளார். மாணவரின் விடுமுறை விண்ணப்பம்‌ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Categories

Blog Archive

Total Pageviews

Popular Posts

Recent Comments