கணபதிபுரம்,அரசு உயர்நிலைப்பள்ளியில்,14.9.19 அன்று,பரத நாட்டிய பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டது. பள்ளித்தலைமையாசிரியை, திருமதி.ரு.கோமளா அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
செல்வி.ஸ்ரீதேவி(சென்னை)
அவர்கள்,பயிற்சியை துவக்கி வைத்தார்.மாணவிகள்,மற்றும் பெற்றோர்கள் கலந்து
கொண்டு சிறப்பித்தனர்.20 மாணவர்கள் பயிற்சியில் கலந்து கொண்டனர்.
அரசுப்பள்ளியில் மாணவர்கள்,பாடங்களை கற்பதுடன்,தனித்திறன்களை
வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த ஒன்றரை வருடங்களாக
பயிற்சி ஆசிரியரைத் தேடியதாகவும்,அத்தேடலில்,கலையை ஏழை மாணவர்களுக்கு மிக
குறைந்த கட்டணத்தில் நிறைவாய் பணி செய்ய வேண்டும் என்ற இலட்சியத்துடன் உள்ள
பயிற்சியாளர் செல்வி.ஸ்ரீதேவி அவர்கள்கிடைத்ததாகவும்,
தலைமையாசிரியை மகிழ்ச்சி தெரிவித்தார்.
பயிற்சியாளர் ஸ்ரீதேவி அவர்கள் பேசும் போது சென்னையிலிருந்து
கணபதிபுரத்திற்கு வரும் பயண தூரம் அதிகமென்றாலும், எட்டாத கலையை ஏழை
மாணவர்களுக்கு எட்டும் படி சேர்ப்பதே தன்னுடைய இலட்சியம் என்று
நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
மாணவியின்
தந்தை ஒருவர் பேசும் போது,எங்கள் கிராமத்தில் முதன் முதலாக கலையை வளர்க்க
இப்படி ஒரு பயிற்சி வகுப்பை ஏற்பாடு செய்ததற்காக மன நிறைவுடன் நன்றி
தெரிவித்தார்.மேலும் வேலூர் மாவட்டத்தில் எந்த ஒரு அரசுப்பள்ளியும்
செய்யாத முயற்சி இது என்றும், அந்த முயற்சிக்கு தலை வணங்குவதாகவும்
தெரிவித்தார்.
ரு.கோமளா
தலைமையாசிரியை
அரசு உயர்நிலைப்பள்ளி
கணபதிபுரம்
வேலூர்மாவட்டம்
9443486065
A Good start ,Congratulations to HM Mrs.R.Komala.
ReplyDelete