சென்னை: தமிழக
பள்ளி கல்வி பாடத்திட்டம் புதுப்பிக்கப்பட்டு, நடப்பு கல்வி ஆண்டில், அனைத்து வகுப்புகளுக்கும், புதிய பாட திட்டம் அமலாகி உள்ளது.
இதில், முக்கிய பாடங்களுக்கு உள்ளது போல, உடற்கல்வி, தொழிற்கல்வி போன்றவற்றுக்கும் புத்தகங்கள் உள்ளன. கலை, ஓவியம், உள்ளிட்ட பாடங்களுக்கும், புத்தகங்களும், பாட திட்டமும் உள்ளன. தமிழக பள்ளி கல்வி துறையின் சார்பில், இதுவரை உடற்கல்வி பாட புத்தகம் வழங்கப்படவில்லை.
கட்டணம் வசூலித்தும், தனியார் பள்ளிகளுக்கு கூட, இந்த புத்தகம் வழங்கப்படவில்லை. ஆனால், அந்த புத்தகத்தில் உள்ள அம்சங்கள் குறித்து, தேர்வு மட்டும் நடத்தப்படுகிறது. புத்தகம் இல்லாமல் தேர்வு நடத்தும் கூத்து, இந்த ஆண்டும் தொடர்கிறது.
இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது:மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், புத்தகங்களை வழங்குவதில், மெத்தனம் காட்டுகிறது.பள்ளிகள் திறந்து நான்கு மாதங்களாகியும், உடற்கல்வி பாடத்திற்கான புத்தகங்கள் வழங்கப்படவில்லை. காலாண்டு தேர்வில் உடற்கல்வி பாடத்துக்கு, வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளது.இதுபோன்ற குளறுபடியால் தான், பல மெட்ரிக் பள்ளிகள், சி.பி.எஸ்.இ., பாட திட்டத்துக்கு மாறுகின்றன. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...