நாடு முழுவதும்
சாதிய கொடுமைகள் தொடர்பாகப் பல்வேறு செய்திகள் வந்தாலும் அவற்றில் கொடுமையானது பள்ளிகளில் இருக்கும் சாதிய பாகுபாடு. எதிர்காலத்தில் சாதிய பாகுபாடு இல்லாத சமூகத்தை உருவாக்குவதற்கு மாணவப் பருவத்திலிருந்து அவர்களைத் தயார்படுத்த வேண்டியது அவசியம். உத்தப்பிரதேசத்தில் உள்ள ஒரு பள்ளியில் பட்டியலின மாணவர்கள் தனித்தட்டில், தனியாகச் சாப்பிடுவது போன்ற சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழகத்திலும் குறிப்பாக, தென் மாவட்டங்களில் பள்ளி மாணவர்களின் கைகளில் கட்டப்பட்டிருந்த சாதிக் கயிறுகள், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. நேற்று கேந்திரிய வித்யாலாவின் பாடப்புத்தகத்தில் இருந்த குறிப்பிட்ட ஒரு பக்கம் அதிகமாக இணையத்தில் பகிரப்பட்டது. அதில், தலித் என்றால் என்ன என்ற கேள்வியும் அதற்கான சாய்ஸ்களாக, வெளிநாட்டவர்கள், தீண்டத்தகாதவர்கள், நடுத்தர மக்கள், உயர்தர மக்கள் என்று வழங்கப்பட்டு இருந்தது.
மற்றொரு கேள்வியானது, டாக்டர் அம்பேத்கர் எந்தச் சமூக வகுப்பைச் சேர்ந்தவர் என்னும் கேள்வியும் அதற்கான சாய்ஸ்களாக, வசதிபடைத்தவர், ஏழை, எகானமி வகுப்பைச் சேர்ந்தவர் எனவும் மூன்று சாய்ஸ்கள் இருந்தன. பொருளாதார ரீதியாகவும் தலித் என்னும் ஒரு சாய்ஸ் மட்டும் சாதிரீதியாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவும் பல்வேறு விமர்சனங்களை எழுப்பியிருந்தது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு என்று தனியாகப் பாடப் புத்தகங்கள் கிடையாது. இங்கு பயன்படுத்தப்படுவது அனைத்தும் என்.சி.இ.ஆர்.டி(NCERT) பாட நூல்கள்தான்!
கேந்திரிய வித்யாலயா விளக்கம்அதற்கடுத்து, இஸ்லாமியர்களின் பொதுப் பண்புகள் என்ன என்ற கேள்வியும் அதற்குச் சாய்ஸாக, இஸ்லாமியர்கள் தங்களின் பெண் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பமாட்டார்கள், அவர்கள் சைவ உணவுகளை மட்டுமே உண்ணக்கூடியவர்கள், ரமலான் நோன்பு நேரத்தில் இரவில் தூங்க மாட்டார்கள், மேலே சொல்லப்பட்ட அனைத்தும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவரங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவை கேந்திரிய வித்யாலயாவின் 6-வது வகுப்பு பாடப்புத்தகத்தில் உள்ள கேள்விகள் எனவும் தகவல் பரவியது. கேந்திரிய வித்யாலயா சென்னை மண்டல நிர்வாகிகளிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டோம். ``எங்கள் பள்ளிகளுக்கு என்று தனியாகப் பாடப் புத்தகங்கள் எதுவும் கிடையாது. இங்கு பயன்படுத்தப்படுபவை என்.சி.இ.ஆர்.டி(NCERT) பாட நூல்கள்தான். குறிப்பிட்ட அந்தப் பக்கம் 6-ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது உண்மைதான். ஆனால், இது கேந்திரிய வித்யாலயாவில் மட்டும் பயன்படுத்தும் புத்தகம் கிடையாது. அகில இந்திய அளவில் பல்வேறு பள்ளிகளில் இந்தப் பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது” என்றதோடு முடித்துக் கொண்டனர்.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Categories

Blog Archive

Total Pageviews

Popular Posts

Recent Comments