சென்னை:
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக சென்னை மாணவர் உதித் சூர்யா
தலைமறைவாகியுள்ள நிலையில் அவரையும் அவருக்காக தேர்வு எழுதிய மாணவரையும்
பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
மருத்துவ
கல்லூரி சேர்க்கைக்காக நீட் எனப்படும் தேசிய தகுதி தேர்வு ஆண்டுதோறும்
நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே எம்பிபிஎஸ் படிப்பில்
சேரமுடியும். இந்த நிலையில் தேனி மருத்துவக் கல்லூரியில் 100 எம்பிபிஎஸ்
இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
அதில்
சென்னையை சேர்ந்த மாணவர் உதித் சூர்யா, ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு
எழுதி, தேனி கல்லூரியில் சேர்ந்திருப்பதாக கல்லூரி முதல்வருக்கு புகார்
வந்தது.இதையடுத்து 4 பேராசிரியர்கள் கொண்ட விசாரணைக் குழுவை மருத்துவமனை
கல்லூரி அமைத்தது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...