சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் ேதர்வில் அகமதிப்பீட்டு முறைகளில் மாற்றங்களை கொண்டு வர சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது.
மேற்கண்ட வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தொடங்குவதற்கு முன்னதாக பிப்ரவரி மாதத்தில் நடத்தப்படும் செய்முறை தேர்வுகளை இந்த ஆண்டு டிசம்பர் மாதமே நடத்த முடிவு செய்துள்ளது. இதன்படி சிபிஎஸ்இ ஒதுக்கும் தேதி மற்றும் நேரங்களில் அந்தந்த பள்ளிகள் பொருத்தமான நாட்களில் செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும். அல்லது அகமதிப்பீட்டுக்கான செய்முறைகளையும் நடத்தி முடிக்க வேண்டும்.பத்தாம் வகுப்பை பொறுத்தவரையில் கணக்கு, அறிவியல், பாடங்களுக்கு எழுத்து தேர்வில் 80 மதிப்பெண்ணும், செய்முறை தேர்வில் 20 மதிப்பெண்களும் வழங்கப்படுகின்றன. அதில் 20 மதிப்பெண்கள் என்பது அகமதிப்பீடுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த செய்முறை மற்றும் அகமதிப்பீட்டுக்காக ஆசிரியர்கள் யாரையும் சிபிஎஸ்இ ஒதுக்கீடு செய்யவில்லை. அதேநேரத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு வகையான மதிப்பீடுகள் வைக்கப்பட்டுள்ளன. எழுத்து தேர்வுக்கு 70 மதிப்பெண் மற்றும் அகமதிப்பீட்டுக்கு 30 மதிப்பெண், அதேபோல 80 மற்றும் 20 என்றும் வைக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட இரண்டில் 70+30 மதிப்பீட்டு முறையின் வரும் பாடங்களுக்கு செய்முறைத் தேர்வுகளை நடத்தவும், கண்காணிக்கவும் அந்தந்த பள்ளி ஆசிரியர்களை நியமிக்கலாம் என்று தெரிவித்துள்ளது. இந்த தேர்வுகளின் மீது சிபிஎஸ்இ தலையிடாது என்று தெரிகிறது.இந்த முறையை ஒரு முன்னோட்டமாக டெல்லி மண்டலத்தில் சிபிஎஸ்இ அறிமுகப்படுத்தி பார்க்க உள்ளது. பின்னர் இது மற்ற மாநிலங்களில் செயல்படும் பள்ளிகளில் அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. ஆனால், இதுகுறித்து எந்தவொரு தெளிவான வழிகாட்டுதலும் சிபிஎஸ்இ வெளியிடவில்லை என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.கடந்த ஆண்டு வரை நடைமுறையில் இருந்த 80+20 மதிப்பீட்டு முறைக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்களா அல்லது பாடங்களின் அடிப்படையில் அகமதிப்பீடு வழங்கப்படுமா என்பது குறித்தும் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.
புதிய முறை குறித்து எந்தவொரு தெளிவான வழிகாட்டுதலையும் சிபிஎஸ்இ வெளியிடவில்லை என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...