Andriod App Download

பாடசாலை வலைதளத்தின் New Android App ஐ Download செய்து பயன்படுத்தவும்! - https://play.google.com/store/apps/details?id=com.padasalai.padasalai

திருக்குறள்


அதிகாரம்:வெகுளாமை

திருக்குறள்:310

இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.

விளக்கம்:

எல்லையற்ற சினம் கொள்பவர் இறந்தவர்க்கு ஒப்பாவார். சினத்தை அறவே துறந்தவர் துறவிக்கு ஒப்பாவார்.

பழமொழி

If you run after two hares you will catch  neither.

இரண்டு படகில் காலை வைப்பவன் கரை சேருவதில்லை.

இரண்டொழுக்க பண்புகள்

1. மலருக்கு மணம் அவசியம் போல மனிதனுக்கு குணம் முக்கியம்.

2. எனவே மனிதரின் குணங்களை வைத்தே அவர்களை மதிப்பிடுவேன்.

பொன்மொழி

வாழ்வின் எல்லைகள் என்பது நாம் வகுப்பது தான். முயற்சி செய்து எல்லைத் தாண்டிய வெற்றிகளே கொண்டாடப் படுகின்றன.

------ மார்ஷல் நேசமணி

பொது அறிவு

1.பூகம்பம் அளக்க உதவும் கருவியின் பெயர் என்ன?

சீஸ்மோகிராஃப்

2. பூகம்பம் எந்த அலகினால் அளக்கப் படுகிறது?

ரிக்டர் அளவினால்

English words & meanings

* Wavelength - The distance between two peaks of a wave. அலை நீளம்.அலைநீளமானது  கிரேக்க மொழியின் லெம்டாவினால் குறிக்கப்படும். அதிர்வெண் அதிகரிக்கும் போது அலைநீளம் குறையும்.

* Watch - Observe attentively over a period of time. An instrument which shows time. கண்காணித்தல். கடிகாரம்ஆரோக்ய வாழ்வு

பாலில் பனங்கற்கண்டை சேர்த்துக் குடித்தால் மார்புச் சளி இளகும்.

Some important  abbreviations for students

* BTW - by the way.

* FB - Facebook

நீதிக்கதை

 முனிவர் காட்டிய வழி

முன்னொரு காலத்தில் அந்தபுரத்தை ஆண்டு வந்த அரசனுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு விக்ரம் எனப் பெயரிட்டு வளர்த்து வந்தான்.

விக்ரம் சிறு வயதிலிருந்தே யாரையும் மதிக்காமல் ஆணவத்துடன் வளர்ந்து வந்தான். அவனுக்கு எட்டு வயது ஆனதும் கல்வி மற்றும் அனைத்து கலைகளையும் கற்பதற்கு குரு குலத்திற்கு அனுப்பி வைத்தார் மன்னர்.

அங்கும் அவன் யார் பேச்சையும் கேட்காமல் குருவையும் மதிக்காமல் இருந்தான். அந்த குருவிடம் மிருகங்களை வசியம் செய்து, அவர் நினைத்தபடி ஆட்டுவிக்கும் சக்தி இருந்தது. அதை உபயோகித்து அவனுக்கு புத்தி புகட்டுவதற்கு ஒரு வழி கண்டுபிடித்தார்.

ஒரு நாள் அனைவரும் ஆற்றில் நீராடிக்கொண்டிருந்த போது இளவரசன் மட்டும் கரையில் அமர்ந்து ஆற்றுக்குள் கல் வீசி விளையாடிக் கொண்டிருந்தான். தூரத்தில் தண்ணீர் அருந்திக் கொண்டிருந்த சிறுத்தையை, தன் வசிய சக்தியால் ஈர்த்து இளவரசனை துரத்தும்படி செய்தார் குரு.

சிறுத்தை இளவரசனை துரத்த ஆரம்பித்ததும், அய்யோ! என்று அலறியபடி அடர்ந்த காட்டிற்குள் ஓடினான்.

இளவரசன் வெகு தூரம் ஓடிக் களைத்து, ஒரு பெரிய மரத்தில் ஏறிக்கொண்டான். துரத்தி வந்த சிறுத்தை அவனைக் காணாமல் சென்றுவிட்டது. பசி வயிற்றைக் கிள்ள, களைப்பில் தூங்கி போனான். தூங்கி எழுந்ததும் சூரியன் உச்சியிலிருந்தான். பசி, களைப்பு, பயம், கவலை இவற்றால் கால், கை நடுக்கமுற என்ன செய்வதென்று தெரியவில்லை.

சிறு வயதிலிருந்தே யாரையும் மதிக்காமல் தவறாக நடந்துகொண்டதை நினைத்து மிகவும் வருந்தினான். தன்னுடன் பயிலும் அனைத்து மாணவர்களும் குருவிடம் எவ்வளவு பயபக்தியுடன் நடந்து கொள்கிறார்கள். நான் மட்டும் ஏன் இப்படி இருக்கிறேன். அதனால் தான் இத்துன்பம் நேர்ந்தது என்று நினைத்து வருந்தினான்.

உடனே குருவை மனதில் நினைத்து குருகுலத்தை சென்று அடைய வழி காட்டும்படி மானசீகமாக குருவிடம் வேண்டிக்கொண்டான். அடுத்த நொடி யானையின் பிளிறல் சப்தம் கேட்டது. யானையைப் பார்த்த இளவரசன் யானைகள் தண்ணீர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கும் திறன் பெற்றவை என்று கேள்விப்பட்டிருக்கிறான். யானை தண்ணீருக்காக செல்வதை அறிந்து, அதன் பின்னால் இளவரசன் நடக்க ஆரம்பித்தான்.

வெகு நேரத்திற்கு பின் யானை ஒரு ஆற்றங்கரையை அடைந்தது. அதன்பின், மகிழ்ச்சியடைந்த இளவரசன் தன் குருவிடம் சென்று அவர் காலடியில் விழுந்து தன்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொண்டான்.

நாடாள வேண்டிய மன்னன் தவறான வழியில் செல்வதை தடுக்க, இந்த நாடகம் நடத்த வேண்டியிருந்ததை நினைத்த குரு, அவனுக்கு கற்பிக்க வேண்டிய அனைத்து கலைகளையும் கற்றுக்கொடுத்து ஒரு நல்ல நாளில் மன்னரிடம் அனுப்பி வைத்தார்.

நீதி :
வயதில் மூத்தோரை மதித்து நடத்தல் வேண்டும்.

திங்கள்
தமிழ்

தூய தமிழ் சொற்கள் அறிவோம்

சௌகரியம்-வசதி
தாகம்-வேட்கை
தேதி-நாள்
திருப்தி-உளநிறைவு
நஷ்டம்-இழப்பு

இன்றைய செய்திகள்

04.11.19

* 12 ஆண்டுகளுக்கு பிறகு முழு கொள்ளளவை எட்டிய பவானி சாகர் அணை.. கடல் போல் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்

* டெல்லி : காற்று மாசினால் 32 விமானங்கள் திருப்பி விடப்பட்டன.

* குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை. கனமழை எதிரொலி.

* 71 லட்சம் மரக்கன்றுகள் நட தமிழக அரசு அரசாணை வெளியீடு.

* இந்திய ஆண்கள், பெண்கள் ஆக்கி அணிகள் அடுத்த ஆண்டு நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றது.

* காற்று மாசுக்கு மத்தியில் டெல்லியில் இந்தியா-வங்காளதேச அணிகள் மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்.   நேற்று முதல்  போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி  பந்துவீச்சை தேர்வு செய்தது.

Today's Headlines

🌸 The Bhavani Sagar Dam reached its full capacity after 12 years.... gives a vision of roaring and rolling sea waves.

 🌸 Delhi: 32 aircrafts are diverted due to air pollution.

 🌸 Bathing in Courtalam  falls is banned due to  heavy rain.

 🌸 Government of Tamil Nadu  released an order to plant 71 lakh trees.

🌸The hockey team for men and women were selected for Olympic which is to be held next year.

🌸 In the midst of severe air pollution in Delhi the match started between Bangladesh and India. Bangladesh won the toss and preferred bowling.

Prepared by
Covai women ICT_போதிமரம்

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...

Bot

RWF

Categories

Blog Archive

Total Pageviews

Recent Comments