பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்ககம் சார்பில் நடந்த சிறப்பு எழுத்தறிவு திட்ட துவக்க விழாவில் பங்கேற்ற அமைச்சரிடம், தான் படித்த பள்ளியின் வளர்ச்சிக்காக ரூ.1 லட்சத்திற்கான காசோலையை வழங்கி அசத்தியுள்ளார், தேவிபட்டினத்தைச் சேர்ந்த ஆசிரியர் பயிற்றுநர் உலகராஜ்.
ஆசிரியர் உலகராஜ்
இதுபோல, பல பள்ளிகளுக்கு அவ்வப்போது என்னால் ஆன உதவிகளைச் செய்துவருவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். தற்போது, நான் படித்த தேவிபட்டினம் அரசுப் பள்ளி வளர்ச்சிக்காக ரூ.1 லட்சத்தை அமைச்சர் மூலம் வழங்கியுள்ளேன். நான் பள்ளிகளுக்குச் செய்யும் உதவிகளை வெளிக்காட்டிக்கொள்வதில்லை.
ஆனால், இன்றைய சூழலில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த பொதுமக்களும் தங்களால் இயன்ற உதவியைச் செய்யவேண்டிய நிலை உள்ளது.
அத்தகையவர்களிடம் உதவும் குணத்தை ஏற்படுத்தும் வகையில், இந்த விழாவில் அமைச்சரிடம் நன்கொடை வழங்கினேன். எனது உதவிகளை இனி வரும் காலங்களிலும் தொடர்வேன்'' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...