தமிழகத்தில் இரண்டாவது நாளாக 5 ஐஏஎஸ் அதிகாரிகள்மாற்றப்பட்டுள்ளனர். 5 புதிய மாவட்டத்துக்கு ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் சேலம் ஆணையர் ரோஹினி டெல்லி அயல்பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.மாற்றப்பட்ட அதிகாரிகள், முன்பு வகித்த பதவியுடன் விபரம் வருமாறு:
1.கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கத்துக்கான சிறப்பு அலுவலர் கிரன் குர்ராலா அம்மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2.தென்காசி மாவட்டம் உருவாக்கத்துக்கான சிறப்புஅலுவலர் அருண் சுந்தர் தயாளன் தென்காசி மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
3. செங்கல்பட்டு மாவட்டம் உருவாக்கத்துக்கான சிறப்பு அலுவலர் ஜான் லூயிஸ் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
4.திருப்பத்தூர் மாவட்டம் உருவாக்கத்துக்கான சிறப்பு அலுவலர் எம்.பி.சிவனருள் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
5.ராணிப்பேட்டை மாவட்டம் உருவாக்கத்துக்கான சிறப்பு அலுவலர் திவ்யதர்ஷினி ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தவிர தமிழ்நாடு இசை மற்றும் கவின் பல்கலைக்கழக பதிவாளர் ரோஹினி டெல்லி உயர் கல்வித்துறை துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு தலைமைச் செயலர் சண்முகம் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...