போக்குவரத்து வாகனங்களை ஓட்டுவதற்கு குறைந்தபட்சம் 8-ம்
வகுப்பு படித்திருக்க வேண்டும் என்று மத்திய மோட்டார் வாகன சட்டம் 1989-ன்
8-வது விதிமுறை இருந்தது.
இந்த விதிமுறை கிராமப்பகுதிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய கல்வி அறிவு இல்லாத திறமையான ஓட்டுனர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக புகார் வந்ததை தொடர்ந்து அந்த விதியை நீக்கி மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவு பிறப்பித்தது.
இதைத்தொடர்ந்து தமிழக அரசின் போக்குவரத்து ஆணையர் சமயமூர்த்தி, ஓட்டுனர் உரிமம் வழங்கும் அதிகாரிகள், உதவி அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.அதில், ‘மோட்டார் வாகன ஓட்டுனர் உரிமம் கேட்டு விண்ணப்பம் செய்பவர்களிடம் அவர்களது கல்வித்தகுதியை கேட்டு வலியுறுத்தக்கூடாது. மத்திய அரசின் உத்தரவை பின்பற்ற வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...