நீட்
தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பது குறித்து முதலமைச்சர்
தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில், மாவட்ட
ஆட்சியர் கதிரவன் தலைமையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
நடைபெற்றது. மூவாயிரத்து 35 பயனாளிகளுக்கு சுமார் மூன்று கோடி மதிப்பிலான
நலத்திட்ட உதவிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், இரண்டாயிரத்து
400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு குக்கிராமங்கள் வரை இணையசேவை வழங்க
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
Quarterly Exam Questions Answers
Home »
» நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பது குறித்து முதல்வர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் - செங்கோட்டையன்







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...