Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 16.12.19

திருக்குறள்


அதிகாரம்:துறவு

திருக்குறள்:344

இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து.

விளக்கம்:

ஒரு பற்றும் இல்லாதிருத்தலே துறவுக்கு ஏற்றதாகும். ஒன்றன் மேல் பற்று வைப்பினும், அது மேன்மேலும் பற்றுகளைப் பெருக்கி மயங்கச் செய்துவிடும்.

பழமொழி

A danger forseen is half avoided

 முன் அறிந்த ஆபத்து பாதி தவிர்த்தது போல்.

இரண்டொழுக்க பண்புகள்

1. புறங் கூறுதல் மாணவனாகிய எனக்கு தகுதி அல்ல எனவே புறங் கூற மாட்டேன்.

 2. பகிர்ந்து கொள்ளும் பழக்கத்தை இப்போது இருந்தே கடைபிடிக்க முயல்வேன்.

பொன்மொழி

நூற்றாண்டுகள் கடந்து இன்றும் வரலாற்றில் இடம் பெற்றவர்கள் அன்று முயற்சி, உழைப்பு இதனை இரு கண்ணாக கொண்டவர்கள் தான்

                  ....இறையன்பு

பொது அறிவு

1. வெள்ளையரை எதிர்த்து தனது பன்னிரண்டாவது வயதில் சிறை சென்றவர் யார் ?
.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சீதாராம் கேசரி.

2. சமூக சீர்திருத்தத்திற்கு பாடுபட்டு வைக்கம் வீரர் என்று அழைக்கப்பட்டவர் யார் ?

ஈ.வே.ரா.பெரியார்

English words & meanings

• Floristry – art of cultivating and selling flowers. மலர்களை உற்பத்தி செய்து அவற்றை வியாபாரம் செய்வது குறித்த அறிவியல்.

• Favourable -showing liking or approval. ஒத்த, உகந்த சூழல் அல்லது நிலைப்பாடு

ஆரோக்ய வாழ்வு

 தினமும் துளசி இலையை மென்று சாறை விழுங்கி வந்தால் குடல், வயிறு ,வாய் தொடர்பான பிரச்சினைகள் வாழ்நாள் முழுக்க வரவே வராது.

Some important  abbreviations for students

 * MA - Master of Arts

* M.PHIL - Master of Philosophy

நீதிக்கதை

அற்புதமான சிற்பி

ஓர் அற்புதமான சிற்பி, ஒருநாள் தெருவில் போய் கொண்டிருந்தவர் ஒரு கடையருகே கனத்த பாறாங்கல் ஒன்றைப் பார்த்தார். ஏதோ பெரிய புதையலைப் பார்த்த மகிழ்ச்சி, அதன் பின் அந்தக் கடைக்காரரிடம், ஐயா, இந்தப் பாறாங்கல் தங்களுக்குத் தேவையா? அல்லது இதை நான் எடுத்துச் செல்லலாமா? என்று கேட்டார். தாராளமாய் எடுத்துச் செல்லுங்கள். இது இந்த இடத்தில் பெரிய இடையூறாய்க் கிடக்கிறது. போவோர் வருவோரெல்லாம் இடறி விழுகின்றனர்! என்றார் கடைக்காரர்.

பாறாங்கல்லை உருட்டிச் சென்ற அந்த சிற்பி, அதை நுட்பமாகச் செதுக்கி அற்புதமான கடவுள் சிலை ஒன்றை உருவாக்கினார். அந்தச் சிலை கடைத்தெருவில் விலைக்கு வந்தது. போட்டி போட்டுக் கொண்டு மக்கள் அதை விலைக்குக் கேட்டானர். அப்படிக் கேட்டவர்களுள் கல்லைக் கொடுத்த கடைக்காரரும் ஒருவர். முடிவில் அந்தக் கடைக்காரரே அதிக விலை கொடுத்து அந்தச் சிலையைப் பெற்றுக் கொண்டார்.

அந்த சிற்பியை மறந்துவிட்ட அந்தக் கடைக்காரர், இந்த அற்புதமான சிலைக்குரிய கல்லை எந்த மலையிலிருந்து எடுத்து வந்தீர்கள்? என்று கேட்டார். அதற்கு சிற்பி, வேறு எங்கிருந்தும் இல்லை. தங்கள் கடை வாசலில் தான் இதைக் கண்டெடுத்தேன். என்னை நினைவில்லையா தங்களுக்கு? ஆறு மாதங்களுக்கு முன் இடையூறாய்க் கிடக்கிறது என்று சொல்லி என்னிடம் நீங்கள் கொடுத்த கல் தான் இது என்றார். கடைக்காரர் வியந்தார். ஆம். தங்கள் பார்வையில் இது தடைக் கல்லாய்த் தெரிந்தது. என் பார்வையில் கடவுளை பொதிந்து வைத்திருக்கும் சிற்பக் கல்லாய்த் தெரிந்தது. வேண்டாத பகுதியையெல்லாம் செதுக்கி எடுத்தேன். உள்ளே இருந்த கடவுளின் உருவம் வெளிப்பட்டது! என்றார். தேவையற்ற சிந்தனைகளை நீக்கினால், பிறர் போற்றும்படியான வாழ்வை பெற முடியும்.

திங்கள்
தமிழ்
தாய தமிழ் சொற்கள் அறிவோம்

கிரயம் - விலை           
குதூகலம்    - அக்களிப்பு         
கோஷ்டி  -  குழாம்       
சக்தி   -   ஆற்றல்           
சகஜம் - வழக்கம்

இன்றைய செய்திகள்

16.12.19

◆சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு விசாரணை சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது.

◆அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி வடகொரியா மீண்டும் முக்கியமான ஏவுகணை பரிசோதனையை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

◆குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று மத்திய பல்கலைக்கழகத் துணை வேந்தர்களைச் சந்தித்து உயர் கல்வி குறித்துப் பேசினார்.

◆சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கும் முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற மே.இ.தீவுகள் அணி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்ததையடுத்து இந்திய அணி முதலில் பேட் செய்யும் வாய்ப்பைப் பெற்றது.

Today's Headlines

*Chennai IIT student Fathima's suicidal case enquiry has been transferred to CBI.

*It  has been reported that North Korea has conducted an important missile test again violating the warning given by America.

*Indian President Ramnath Govind had an  interaction with the Vice-Chancellors of Central University regarding higher education today.

*In the one day match in Chennai chepauk stadium  between India and West Indies, as West Indies has won the toss and decided to field, Indian team has got the chance to bat first.

Prepared by
Covai women ICT_போதிமரம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive