தமிழக பள்ளி கல்வித்துறை பாட திட்டத்தில் அரையாண்டு
தேர்வு டிசம்பர்11ல் துவங்கி நடந்து வருகிறது.டிச., 23ம் தேதி அனைத்து
தேர்வுகளும் முடிகின்றன. இந்நிலையில் அரையாண்டு தேர்வில் பல்வேறு
பாடங்களின் வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்பே வெளியாகி விட்டன.
ஏற்கனவே பிளஸ் 1, பிளஸ் 2 வேதியியல் வினாத்தாள்கள் டிச. 17 18ல் 'யூ டியூப்' வழியாக வெளியாகின. நேற்று நடந்த 10ம் வகுப்பு அறிவியல் தேர்வுக்கான வினாத்தாளும் சமூக வலைதளங்களில் நேற்று காலை வெளியானது.
தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 அரையாண்டு தேர்வுக்கான வினாத்தாள்கள் அரசு தேர்வுத்துறை இயக்குனரகத்தால் தயாரிக்கப்பட்டு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டன.
இந்த வினாத்தாள்கள் தேர்வுக்கு முன் வெளியாகி வருவதால் தேர்வு துறையின் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது.இதையடுத்து வினாத்தாள் வெளியாகும் சம்பவங்கள் குறித்து போலீசில் புகார் அளிக்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
மார்ச்சில் நடத்தப்பட உள்ள பொதுத்தேர்வில் வினாத்தாள் வெளியாகாமல் தடுக்கும் வகையில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக அதிகாரிகள்தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...