வனக்காப்பாளர் பணிக்கான தேர்வில் பங்கேற்க விரும்புவோருக்கு உதவும் வகையில், தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டு உள்ளது.வனத்துறையில், 320 வனக்காப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான, ஆன்லைன் விண்ணப்பப் பதிவு நடந்து வருகிறது. இந்த பதிவு பணிகள், பிப்ரவரி, 14 வரை தொடரும்.தேர்வுக்கு விண்ணப்பிப்போருக்கு எழும் சந்தேகங்களை தீர்க்க, வனத்துறை சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது. இதற்காக, 1800 419 2929 என்ற, கட்டணமில்லா தொலைபேசி எண் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணில், வாரத்தின் அனைத்து நாட்களிலும், காலை, 8:00 முதல், இரவு, 8:00 மணி வரை அழைத்து, விண்ணப்பதாரர்கள் தகவல்களை பெறலாம் என, வனத்துறை தெரிவித்துள்ளது.
பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

Home »
» வனக்காப்பாளர் பணிக்கான தேர்வில் பங்கேற்க விரும்புவோருக்கு உதவும் வகையில், தொலைபேசி எண் அறிவிப்பு.
0 Comments:
Post a comment
Dear Reader,
Enter Your Comments Here...