++ பள்ளி பொதுத்தேர்வு பணியில் ஊனமுற்ற , உடல்நலம் குன்றிய ஆசிரியர்களுக்கு விலக்கு..! அரசு ஊழியர், ஆசிரியர் நல கூட்டமைப்பு வேண்டுகோள்! ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::

Subam Matrimony

சுபம் - இலவச திருமண தகவல் மையம்

https://www.subammatrimony.com/

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
b0c843c1-2ea5-4d48-abe3-4f0194e19e55

மார்ச் 2ம் தேதி முதல் தொடங்கும் பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு பணிகளில் உடல்நலம் பாதித்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், மகப்பேறு ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை தேர்வு பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தேர்வுத்துறை இயக்குநர் ஆகியோருக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக இந்த கூட்டமைப்பின் நிறுவன தலைவர் ச.அருணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் வருகின்ற மார்ச் 2ம் தேதி முதல் பனிரெண்டாம் வகுப்பு பதினோராம் வகுப்பு பத்தாம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு தொடர்ந்து நடக்க உள்ளது, பனிரெண்டு மற்றும் பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு பணியில் உயர்நிலைப் பள்ளி மேனிலைப்பள்ளிகளில் பணியாற்றும் முதுகலை ஆசிரியர்கள் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசியர்களை தேர்வு  அறை கண்காணிப்பாளராகவும், பறக்கும்படையிலும், துறை அலுவலர்களாகவும் தலைமையாசிரியர்களை தேர்வு நடத்தும் முதன்மை அலுவலர்களாகவும் மற்றும் பள்ளி அலுவலக பணியாளர்களை அலுவலக பணிக்கு ஈடுபடுத்துவார்கள்.

அதேபோன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கு பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசியர்களை தேர்வு பணிகளில் ஈடுப்படுத்துவார்கள்.

இந்த ஆண்டு ஏமிஸ் ( EMIS )என்ற டேட்டா என்ட்ரி மூலம் அனைத்து வகை ஆசிரியர்கள் அலுவலக பணியாளர்கள் பெயர் பட்டியலை எடுத்து தேர்வு பணிக்கு பயன்படுத்த அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் பணிபுரிபவர்கள் இன்று விடுவிப்பு செய்து தேர்வுப்பணி கூட்டத்திற்கு அனுப்பிவைக்க முதன்மைக் கல்வி அலுவலர் சார்பில் அந்தந்த பள்ளி இணைய முகவரிக்கு சுற்றரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு எழுத 3 மணி 15 நிமிடம் அதாவது 3 மணி நேரம் தேர்வு எழுதவும், 15 நிமிடம் வினாத் தாளை படித்து பார்க்க நிர்ணயக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள், பணியாளர்கள் காலை 8.00 மணிக்கே தேர்வு மையத்திற்கு வரவேண்டிய சூழ்நிலையில், தொடர்ந்து 4 மணி முதல் 5 மணிவரை நின்று பணியாற்ற வேண்டிருக்கும். இந்த சூழ்நிலையில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் உடல்நலம் சரியில்லாதவர்கள் அதாவது புற்றுநோய், இருதய பிரச்சனை காச நோயளிகள் பெருமளவில் அறுவைசிகிச்சை செய்துக் கொண்டவர்கள், கர்ப்பமுற்றவர்கள் நீண்டநேரம் நின்று பணி செய்யமுடியாது.

அவர்களை தேர்வுப் பணியில் இருந்து விடுவிக்க பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தேர்வுத்துறை இயக்குநரை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் சா. அருணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...