Best NEET Coaching Centre in Tamilnadu

Best NEET Coaching Centre in Tamilnadu

இந்த வருடத்தின் மோசமான Password வெளியான பட்டியல், லிஸ்டில் நீங்க இருக்கீங்களா?

இந்த வருடத்தின் மோசமான Password
வெளியான பட்டியல், லிஸ்டில் நீங்க இருக்கீங்களா?


நாம் பயன்படுத்தும் செல்போன், கம்ப்யூட்டர், இ மெயில், நெட்பேங்கிங் என எல்லாவற்றிக்கும் பாஸ்வோர்ட்களை நாம் விரல் நுனியில் நினைவில் வைத்திருப்பது சற்று கடினமான வேலை தான். இதனால் மிக எளிதாக நம் நினைவுகளில் இருக்கும்படி பாஸ்வோர்ட்களை செட் செய்யவே நம்மில் பலரும் விரும்புவோம்.

நமக்கு எளிதாக நினைவில் நிற்கும் நம் பாஸ்வோர்ட்கள், ஹேக்கர்ஸ் எனப்படும் சைபர் குற்றங்களில் ஈடுபடுவோர் நமது பாஸ்வோர்ட்களை ஹேக் செய்து திருட்டு வேலைகளில் ஈடுபட நம் அதைவிட மிக எளிதாக அனுமதிக்கிறோம் என்பதே உண்மை.

சர்வதேச அளவில் 2019 ஆம் ஆண்டில் இவ்வாறு பயன்படுத்தப்பட்ட எளிதாக கண்டுபிடிக்க கணிக்கக்கூடிய 10 பாஸ்வோர்ட்களின் பட்டியலை, worst passwords of 2019 என்ற பெயரில் Splash Data என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.


ஆண்டுதோறும் இந்த பட்டியல் வெளியிடப்பட்டாலும் இதில் இடம்பெறும் பாஸ்வோர்ட்களில் பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை. டாப் 10ல் உள்ளவையே மாறி மாறி மீண்டும் பட்டியலில் இடம் பிடித்து வருகிறது.


Splash Data என்ற நிறுவனம் வெளியிட்ட worst passwords of 2019 பட்டியல் விவரம் பின்வருமாறு:


மோசமான பாஸ்வோர்ட்கள் பட்டியலில் வழக்கம் போல இந்த ஆண்டும் 123456, 123456789, qwerty, மற்றும் password ஆகிய பாஸ்வோர்ட்கள் முதல் நான்கு இடங்களில் உள்ளன. இதில் நான்காம் இடத்தில் உள்ள password, கடந்த 2018 ஆம் ஆண்டு இரண்டாம் இடத்தில் இருந்தது.

1. 123456

2. 123456789

3. qwerty

4. password

5. 1234567


6. 12345678

7. 12345

8. iloveyou

9. 111111

10. 123123

2020 வருடம் பிறப்பதற்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் நீங்கள் ஒரு புத்தாண்டு தீர்மானத்தை எடுக்க நினைக்கிறீர்கள் என்றால் என உங்கள் பாஸ்வோர்ட்களை மேம்படுத்த சபதம் செய்யுங்கள். அதன்படி உங்கள் இ மெயில், நெட்பேங்கிங் மின்னஞ்சல், வங்கி ஏ.டி.எம் மற்றும் கிரெடிட் கார்டுகள் சமூகவலைத்தள கணக்குகள் போன்ற உங்கள் முக்கியமான கணக்குகளுக்கு குறைந்தபட்சம் வலுவான மற்றும் தனித்துவமான பாஸ்வோர்ட்களை உருவாக்கி கொள்வது அவசியம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive