குஜராத்தில் 1 முதல் 9, 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி
கரோனா எதிரொலியாக குஜராத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களைத் தவிர மற்ற வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதுமே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, குஜராத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களைத் தவிர மற்ற வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவார்கள் என அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதாவது 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி செய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, உத்தர்பிரதேசத்திலும் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...