ஆணை : தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய்தொற்றினை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி , அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் 27 . 03 . 2020 முதல் 13 . 04 . 2020 வரையிலான நாட்களில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவது தொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலர்கள் / மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன .
1 . அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் 27 . 03 . 2020 முதல் 13 . 04 . 2020 வரையிலான நாட்களில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது .
2 . தற்போது நடைபெற்று வரும் மார்ச் 2020 பருவத்திற்கான மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் 23 . 03 . 2020 மற்றும் 26 . 03 . 2020 ஆகிய இரு நாட்களிலும் , மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் 24 . 03 . 2020 அன்றும் ஏற்கனவே திட்டமிட்டபடி நடைபெறும் .
3 . மேற்குறிப்பிட்டவாறு ஒத்தி வைக்கப்படும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும் நாட்கள் குறித்த விவரம் , அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் பின்னர் அறிவிக்கப்படும் .
4 . அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் , தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு , பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ள விவரத்தினை , அவர்களது பள்ளிகளில் பயிலும் சம்பந்தப்பட்ட மாணாக்கர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் தெரிவிக்குமாறு அறிவுறுத்தவேண்டும் .
5 . பத்தாம் வகுப்பு தேர்வு ஒத்தி வைப்பது தொடர்பான அறிவிப்பு அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளின் அறிவிப்பு பலகைகளிலும் , அனைவரும் அறியும் வண்ணம் ஒட்டி வைக்க நடவடிக்கை மேற்கெள்ளப்பட வேண்டும் .
6 . முதன்மைக் கல்வி அலுவலர்கள் , தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து பத்தாம் வகுப்பு வினாத்தாள் கட்டுக் காப்பாளர்களுக்கும் , தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்ட விவரத்தினை தெரிவித்து , அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து அடுத்த அறிவிப்பு வெளியிடப்படும் வரை எக்காரணம் கொண்டும் வினாத்தாள் கட்டுக் காப்பு மையங்களை திறக்கக்கூடாது என அறிவுறுத்த வேண்டும் .
7 . வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பு பணியில் இருப்பதையும் , கட்டுக்காப்பு மையத்தில் முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர் ஒருவர் பணியில் இருப்பதையும் , முதன்மைக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்துக்கொள்ளவேண்டும் .
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...