இன்றைய நவீன யுகத்தில் கம்ப்யூட்டர் திரை மீதும் மொபைல் திரை மீதும் கண்
வைக்காத நேரம் வெகு சொற்பம்தான். மொபைல் அறிமுகமான காலத்தில், அழைப்பு
வந்தால் எடுத்துப் பேசிவிட்டு, அது இருந்த இடத்திலேயே வைத்துவிட்டு அடுத்த
வேலைக்கு நகர்ந்திருப்போம்.
சிலர்,`ஸ்நேக்', கிரிக்கெட் போன்ற கேம்ஸ்களை விளையாடியிருப்பார்கள். ஆனால்,
ஸ்மார்ட்போன்களின் வருகைக்குப் பிறகு அது அப்படியே தலைகீழாகிப்போனது.
வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் அளவளாவி, ஷாப்பிங்
அப்ளிகேஷன் ஆப்களை அலசி, நெட் ப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஹாட் ஸ்டார்,
ஆல்ட் பாலாஜி என விதவிதமான என்டர்டெயின்மென்ட் ஆப்களில் மகிழ்ந்து
இணையத்தைவிட்டு வெளியேற இம்மியளவும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது.
கண்கள் பாதிக்காமல் ஸ்மார்ட் போன் பயன்படுத்த சில டிப்ஸ்!
Movies
பார்க்கத் தவறிய, பார்க்க விரும்பும் அத்தனை விஷயங்களும் `யூடியூ'பில்
கொட்டிக் கிடக்கின்றன. ஒருமுறை `யூடியூ'புக்குள் நுழைந்துவிட்டால்,
புதிதாகப் பார்க்கவேண்டிய வீடியோக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேதான்
போகின்றன. நேரம் போதாமல் நினைவில் வைத்து, நேரம் கிடைக்கும்போது
கண்டுகளிப்பது அனைவருக்குமான பொதுப் பழக்கமாகிவிட்டது.
கண் மருத்துவர் நவீன்இப்போது பலரும் மொபைல் போன்களைக் கண்களுக்கு மிக
நெருக்கமாக வைத்துப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அது முற்றிலும் தவறான
விஷயம். அதனால், கண்வலி உள்ளிட்ட கண் சார்ந்த பாதிப்புகள் உண்டாக அது
வழிவகுக்கும். கண்ணுக்கும் மொபைல் போனுக்கும் குறைந்தது 60 செ.மீ
இடைவெளியாவது இருக்க வேண்டும்.
Mobile
அதுமட்டுமில்லாமல், தியேட்டருக்குச் சென்று படம் பார்க்கும் பழக்கமும்
இப்போது வெகுவாக குறைந்துவிட்டது. இருக்கவே இருக்கிறது ஸ்மார்ட்போன்...
பிடித்த திரைப்படத்தை, வீட்டில் உட்கார்ந்து, படுத்து, சாய்ந்து என அவரவர்
சௌகர்யப்படி பார்த்துக்கொள்ளலாம். திரைப்படங்கள் மட்டுமா? விறுவிறுப்பான
திரைக்கதைகளோடு மனதைக் கவரும் வெப் சீரியஸ்கள் வேறு சாரைசாரையாக
வந்துகொண்டிருக்கின்றன. ஸ்மார்ட்போன்கள் வந்தபிறகு பலருக்கும் காலம்
திரைக்காட்சிகளாகத்தான் மனக்கண்ணில் காட்சியளிக்கின்றன. இந்தப் பழக்கம்
நாளுக்குநாள் அதிகரிக்குமே தவிர இனி குறையப் போவதில்லை. ஆனால்,
`தொடர்ச்சியாக ஸ்மார்ட்போன்களைப் பார்த்துக்கொண்டே இருந்தால் பல்வேறு
விதமான உடல்நலக் கோளாறுகள் உண்டாகும் வாய்ப்புண்டு. குறிப்பாக பார்வைக்
கோளாறுகள்.
ஆனால், `சில உத்திகளைக் கடைப்பிடித்தால் அவற்றைத் தவிர்க்க முடியும்'
என்கிறார் கண் மருத்துவர் நவீன். கண் மருத்துவர் நவீன்பலர் இருட்டில்
மொபைல் போன்களைப் பயன்படுத்துவார்கள். சிலர் படுத்துக்கொண்டே படம்
பார்ப்பது, கேம்ஸ் விளையாடுவது எனப் பல வேலைகளில் ஈடுபடுவார்கள். அதுவும்
முற்றிலும் தவறான பழக்கம். போனிலிருந்து வெளியாகும் அதிகமான ஒளி கண்களைப்
பதம் பார்த்துவிடும். `இப்போது பலரும் மொபைல் போன்களைக் கண்களுக்கு மிக
நெருக்கமாக வைத்துப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
அது முற்றிலும் தவறான விஷயம். அதனால், கண்வலி உள்ளிட்ட கண் சார்ந்த
பாதிப்புகள் உண்டாக அது வழிவகுக்கும். கண்ணுக்கும் மொபைல் போனுக்கும்
குறைந்தது 60 செ.மீ இடைவெளியாவது இருக்க வேண்டும். அதேபோல கழுத்தைத் தொங்க
போட்டபடியே மொபைல்போன்களில் மூழ்கிக் கிடக்கிறார்கள் பலர். அது
தொடரும்பட்சத்தில் கழுத்துத் தசை பாதிக்கப்பட்டு, கழுத்துவலியும்
முதுகுவலியும் உண்டாகும். இந்தப் பாதிப்புக்கு `டெக்ஸ்ட் நெக்' (Text Neck)
என்று பெயர். இந்தப் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்க, 40 டிகிரிக்குக் கீழ்
கழுத்தை வளைக்கக் கூடாது. கண்களை மட்டும் உருட்டி திரையைப் பார்க்க
வேண்டும்.
Mobile Night Usage
அதேபோல பலர் இருட்டில் மொபைல்போன்களைப் பயன்படுத்துவார்கள். சிலர்
படுத்துக்கொண்டே படம் பார்ப்பது, கேம்ஸ் விளையாடுவது எனப் பல வேலைகளில்
ஈடுபடுவார்கள். அதுவும் முற்றிலும் தவறான பழக்கம். போனிலிருந்து வெளியாகும்
அதிகமான ஒளி கண்களைப் பதம் பார்த்துவிடும். அதனால், தூக்கப் பிரச்னைகள் உண்டாகும். சரியான தூக்கம் இல்லாவிட்டால்
அடுத்தநாள் சுறுசுறுப்பாக இயங்க முடியாது. அதனால் மனஅழுத்தம் உண்டாகி,
சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் ஆகிய பிரச்னைகளும் ஏற்பட வாய்ப்புண்டு. கண்
மருத்துவர் நவீன்தொடர்ச்சியாக மொபைல் போன், கம்ப்யூட்டர் திரைகளைப்
பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். அத்தியாவசியமாக பார்த்தே ஆக வேண்டும்
என்றால் அரை மணி நேரத்துக்கு ஒருமுறை சிறு இடைவெளி எடுத்துக்கொள்ள
வேண்டும். பார்வையை வேறு எங்காவது தூரத்தில் உள்ள பொருள்களை நோக்கிச்
செலுத்த வேண்டும். அடிக்கடி கண் சிமிட்ட வேண்டும்.
Laptop
தொடர்ச்சியாகக் கணினித்திரையை, மொபைல் போன் திரையைப் பார்ப்பவர்களுக்கு
உலர் கண்கள் (Dry Eyes) பாதிப்பு உண்டாகும். இதனால் கண்களில் நீர் வறட்சி
உண்டாகி, கண் உறுத்தல், கண் சிவந்து போதல், பார்வை மங்குதல் போன்ற பல
பாதிப்புகள் ஏற்படும். கண்களும் அருகில் இருப்பதை பார்க்கப்
பழக்கப்பட்டுவிடும். அதனால் தூரத்தில் உள்ள பொருள்களைப் பார்ப்பதில்
சிக்கல் உண்டாகும். கண்களின் ஆரோக்கியத்துக்குக் கண் சிமிட்டுவது மிகவும்
இன்றியமையாதது. ஒரு நிமிடத்துக்கு ஆறு முதல் எட்டு முறை கண் சிமிட்டியே ஆக
வேண்டும். ஆனால், மொபைல் போன், கம்ப்யூட்டரைத் தீவிரமாகப்
பார்த்துக்கொண்டிருந்தால் கண் சிமிட்டுவது நிமிடத்துக்கு ஒருமுறை,
இருமுறையாகக் குறைய வாய்ப்பிருக்கிறது. அதனால், கண்ணீர் மிக விரைவில்
ஆவியாகிவிடும். இது மிகவும் ஆபத்தானது. அதனால் தொடர்ச்சியாக மொபைல் போன்,
கம்ப்யூட்டர் திரைகளைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏ.சி அறைகளில் வேலை
செய்பவர்களுக்கும் உலர் கண்கள் (Dry Eyes) பாதிப்பு உண்டாக வாய்ப்பு
அதிகம்.
ஏ.சி. அறைகளில் வேலை பார்ப்பவர்கள் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை அந்த அறையை
விட்டு வெளியேறி ரிலாக்ஸ் செய்துகொள்வது நல்லது அத்தியாவசியமாக பார்த்தே
ஆக வேண்டும் என்றால் அரை மணி நேரத்துக்கு ஒருமுறை சிறு இடைவெளி
எடுத்துக்கொள்ள வேண்டும். பார்வையை வேறு எங்காவது தூரத்தில் உள்ள பொருள்களை
நோக்கிச் செலுத்த வேண்டும். அடிக்கடி கண் சிமிட்ட வேண்டும்.
`மேக்னிஃபையிங் ஸ்கிரீன்' பொருத்தியும் பார்க்கலாம். ஆனாலும், கண்ணுக்கு
மிக அருகில் வைத்துப் பார்க்கக் கூடாது. உலர் கண்கள் பாதிப்புக்கு
ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுத்துக்கொண்டால், மருந்துகளின் மூலமாகச்
சரிசெய்துவிடலாம். தவறும் பட்சத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை
ஏற்படும்.
Lens
கண்ணில் லென்ஸ் பயன்படுத்துபவர்களுக்கு இயல்பாகவே கண்ணீர் வறட்சி
இருக்கும். அவர்கள் மொபைல் போனை அதிக நேரம் பயன்படுத்தினால் பிறரைக்
காட்டிலும் வெகு சீக்கிரமாகவே உலர் கண்கள் பாதிப்பு உண்டாகும். ஏ.சி
அறைகளில் வேலை செய்பவர்களுக்கும் இந்தப் பாதிப்பு உண்டாக வாய்ப்பு அதிகம்.
ஏ.சி. அறைகளில் வேலை பார்ப்பவர்கள் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை அந்த அறையை
விட்டு வெளியேறி ரிலாக்ஸ் செய்துகொள்வது நல்லது'' என்கிறார் மருத்துவர்
நவீன்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...