++ பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் செய்ய வேண்டிய பணிகள் நாள் வாரியான பட்டியல் CEO வெளியீடு. ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::
பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
Screenshot_20200319_070631

பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைக்கிணங்க , விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் பொருட்டு 17.03.2020 முதல் 31.03.2020 வரை விடுமுறை அறிவித்து , பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் அலுவலகப்பணிகளை மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது . எனவே இணைப்பில் காணும் பட்டியலில் தெரிவித்துள்ளவாறு ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பணிகளை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

மேலும் இப்பணிகளை அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் , வட்டாரக் கல்வி அலுவலர் , வட்டார வள மைய மேற்பார்வையாளர் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் கவனிக்குமாறும் , இப்பணியில் சுணக்கம் ஏதும் இன்றி பணியினை கண்காணிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . மேலும் இப்பணிகள் சார்ந்த தொகுப்பு அறிக்கையினை இப்பணிகள் முடிந்தவுடன் தயார் செய்து இவ்வலுவலகத்திற்கு அனுப்புமாறு அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

இணைப்பு : பணிகள் சார்ந்த உரிய பட்டியல்:


0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...