Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

1முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பாடங்கள் NCERT தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்ப நடவடிக்கை

👉அனைத்து என்சிஇஆர்டி தொலைக்காட்சி சேனல்களிலும், முதலாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான இணைய வழி கற்றல் மூலம் பாடங்களை ஒளிபரப்புவதற்காக, என்சிஇஆர்டி–யும், ரோட்டரி இந்தியாவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
👉மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் முன்னிலையில் டிஜிட்டல் முறையில் கையெழுத்திட்டுள்ளன.
👉இணை வழி கற்றலை மேலும் பயனுள்ளதாக்கும் வகையில், அனைத்து தேசிய கல்வி, ஆராய்ச்சி குழுமத்தின் (NCERT) தொலைக்காட்சி அலைவரிசைகளிலும், முதலாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான, மின் கற்றலுக்கான பாடங்களை ஒளிபரப்புவதற்காக, என்சிஇஆர்டி–யும், ரோட்டரி இந்தியாவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில், மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் முன்னிலையில் டிஜிட்டல் முறையில் இன்று புதுடெல்லி கையெழுத்தானது. இந்த டிஜிட்டல் நிகழ்ச்சியில் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறைச் செயலர் அனிதா கர்வால் பங்கேற்றார்.
👉என்சிஇஆர்டி-க்கும் ரோட்டரி கிளப்புக்கும் இடையே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதை அறிவிப்பது குறித்து தாம் மகிழ்ச்சி அடைவதாக மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்தார். கோவிட்-19 தொற்று நிலவுகின்ற சூழலிலும், ரோட்டரி இந்தியா ஹ்யூமானிடி ஃப்வுண்டேஷன் அமைப்பும் என்சிஇஆர்டி-யும் இணைந்து மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறையின் வழிகாட்டுதலுடனும், ஆதரவுடனும் ஒன்றிணைந்து, மின்கற்றல், என்சிஇஆர்டி ஒப்புதல் பெற்ற பாடத் திட்டங்களுடன் நாடு முழுவதிலும் உள்ள குழந்தைகளைச் சென்று சேர வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்
👉ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்குமான பாடத்திட்டங்களை மின் கற்றல் மூலமாக கற்றுக்கொள்ளும் வகையில், ஹிந்தி மொழியில் வடிவமைத்து ரோட்டரி இன்டர்நேஷனல் வித்யா தான் 2.0 என்ற திட்டத்தின் கீழ் என்சிஇஆர்டி-யிடம் அளிக்கும் என்று தெரிய வந்துள்ளதில் மிக்க மகிழ்ச்சி அடைவதாக அமைச்சர் கூறினார். 
👉இந்தப் பாடங்கள் நல்ல உயர்ந்த தரம்
கொண்டவையாக உள்ளன என்றும், இது நமது குழந்தைகள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் மத்திய அமைச்சர் கூறினார். இதுமட்டுமல்லாமல், சிறப்புத் தேவைகள் உள்ள குழந்தைகளுக்காக பாடங்களை அவர்களுக்கேற்ற வகையில் வடிவமைத்து ரோட்டரி இன்டர்நேஷனல் அளிக்கும். முதியோர் கல்வித் திட்டத்திற்கான அனைத்துப் பாடங்களையும் ரோட்டரி இன்டர்நேஷனல் வழங்கும். ஆசிரியர்களுக்கான பயிற்சி மின் கற்றலுக்கான பாடங்களையும் ரோட்டரி இன்டர்நேஷனல் அளிக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.
👉புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விவரங்கள் குறித்து ரோட்டரி இன்டர்நேஷனல் இயக்குநர் கமல் சாங்வி தெரிவித்ததாவது:
👉என்சிஇஆர்டி தொலைக்காட்சியுடன் ஒப்பந்தம்: என்சிஇஆர்டி 12 தேசிய தொலைக்காட்சி சேனல்கள் மூலமாக 1 முதல் 12-ஆம் வகுப்பு வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கான பாடத்திட்டங்கள் ஒளிபரப்பப்படும். இதற்கான பாடங்கள் ஜூலை 2020 முதல் கிடைக்கவேண்டும். இந்தப் பாடங்கள் என்சிஇஆர்டி வரையறையின் படி உள்ளதா என்பதைச் சரிபார்த்து, என்சிஇஆர்டி ஒப்புதல் அளிக்கும்.
👉தீக்ஷா செயலியுடனான ஒப்பந்தம்: மின் கற்றலுக்கான இந்தப் பாடங்கள் மத்திய அரசின் தேசிய அலைபேசி செயலியான தீக்ஷா மூலமாகவும் கிடைக்கும். இந்தப்பாடங்கள் அனைத்தும் ஹிந்தி மொழியிலும், பஞ்சாபி மொழியிலும் ஏற்கெனவே தயாரிக்கப்பட்டுவிட்டன. எனவே சுமார் 10 கோடி மாணவர்கள் பயன்பெறும் வகையில், 12 மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களில் இவற்றை உடனடியாக செயல்படுத்த முடியும்.
👉இதற்கான அறிவுசார் உரிமை ரோட்டரியிடமிருக்கும். இது என்சிஇஆர்டி-க்கும் அளிக்கப்படும். இதனால் என்சிஇஆர்டி இதை அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்த்துக் கொள்ளலாம். சம்பந்தப்பட்ட மாநில எஸ்சிஇஆர்டி, அடுத்த சில மாதங்களில் இதை நடைமுறைப்படுத்தலாம்.
👉1 முதல் 12ம் வகுப்பு வரையிலான பாடங்களை நாங்கள் பலருடன் இணைந்து மின் கற்றலுக்காக வடிவமைத்துத் தயாரித்துள்ளோம். இதை நாங்கள் தேசத்திற்கு இலவசமாக வழங்க உத்தேசித்துள்ளோம். பள்ளிக்குச் சென்று அவர்கள் பயிலும் பாடத்திட்டங்கள் அனைத்தையும் வீடுகளிலிருந்து கற்கும் முறையில் ஒரு தீர்வாக இது இருக்கும். மின் கற்றல் துறையில் ரோட்டரி அமைப்புக்கு மிகப்பரந்த அனுபவம் உண்டு. கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் பல்வேறு இடங்களில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப்பள்ளிகளில் மின் கற்றலுக்கான மென்பொருள் மற்றும் ஹார்டுவேர் வசதிகளை ரோட்டரி ஏற்கனவே செய்து கொடுத்துள்ளது.
இவ்வாறு கூறினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive