++ மீண்டும் தள்ளி போகிறதா 10ஆம் வகுப்பு தேர்வு? அமைச்சர் செங்கோட்டையன், முக்கிய ஆலோசனை ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::

Subam Matrimony

சுபம் - இலவச திருமண தகவல் மையம்

https://www.subammatrimony.com/

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு ஜூன் 15 முதல் 25 வரை நடைபெற போவது உறுதி என கிட்டத்தட்ட செய்திகள் வெளியான நிலையில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் திடீரென தேர்வுகள் தள்ளி வைக்க வாய்ப்பு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் வெளிவரும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  

  10ஆம் வகுப்பு தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என பெற்றோர்கள், எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் என பல்​வேறு தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில், கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் நாளை முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.  தலைமை செயலகத்தில் இந்த ஆலோசனை நாளை காலை 9.30 மணிக்கு நடைபெறும் எனவும் இந்த ஆலோசனையில் 10ஆம் வகுப்பு தேர்வுகள் நடத்துவது, அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர தனி இட ஒதுக்கீடு அளிக்கும் விவகாரம், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு வரும் 15ஆம் தேதி முதல் நீட் தேர்வு குறித்து ஆன்-லைன் வழியில் பயிற்சி ஆகியவை குறித்தும் விவாதிக்கப்படும் என தெரிகிறது.  இந்த ஆலோசனை கூட்டம் முடிந்தவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, அமைச்சர் செங்கோட்டையன் சந்திக்க வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் பள்ளிக்கல்வி துறை வட்டாரங்களில் தகவலின்படி 10ஆம் வகுப்பு தேர்வு மீண்டும் தள்ளிப்போக வாய்ப்பே இல்லை எனவும் கூறப்படுகிறது.

1 comment:

  1. அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் சேர தனி இட ஒதுக்கீடு அளிக்கும் விவகாரம்..........அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்க்கு தர வேண்டும்....RTE வயது படி நேரடி 8 ஆம் வகுப்பில் சேரலாம்..எனவே 8 முதல் 12 வரை Govt /Govt Aided ல் படித்தால் தரலாம்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...