மருத்துவப் படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஓபிசி இடஒதுக்கீடு கோரி தமிழக அரசு, திமுக உள்ளிட்ட பல கட்சிகள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
ஆண்டுதோறும் MBBS, MDMS என்ற இரண்டு பிரிவுகளில் நாடு முழுவதும் இருக்கக்கூடிய அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் MBBS பிரிவில் 15 சதவீதமும் MDMS என்கின்ற மருத்துவ மேற்படிப்பு பிரிவில் 50% சதவீதமும் , மேலும் சிறப்பு படிப்பு எனும் MCHDM என்ற பிரிவுக்கு 100 சதவீத இடங்களையும் அகில இந்திய தொகுப்புக்கு அனைத்து மாநிலங்களும் அளிப்பது வழக்கமான ஒன்றாகும். இதில் அண்மை காலமாக தமிழகத்தில் இதுகுறித்த சர்ச்சைகள் வெடித்தன. இதில் பிற்படுத்தப்பட்ட ஓபிசி பிரிவினருக்கு பல ஆண்டுகளாக அவர்களுக்கான இடங்கள் நிரப்பப் படவில்லை என தகவல் வெளியானது. இதனையடுத்து
இவ்வாறு மத்திய தொகுப்புக்கு வழங்கப்படும் இடங்களில் பிற்பட்ட மற்றும் மிகவும் பிற்பட்ட வகுப்பினர் அடங்கிய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவிடக் கோரி அதிமுக, திமுக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகும்படி அறிவுறுத்தியது. அதன்படி அதிமுக, திமுக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.
இந்த நிலையில் உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இதுகுறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து இன்று திடீர் திருப்பமாக மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்ட ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...