3டி பிரிண்டிங்கில் முகக்கவசங்களை இலவசமாக தயாரித்து வழங்கும் 10 ஆம் வகுப்பு மாணவர்
தில்லியைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவர் 3டி பிரிண்டிங்கில்
முகக்கவசங்களை தயாரித்து போலீஸார் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு
இலவசமாக வழங்குகிறார்.
நேற்று தில்லி போலீஸாருக்கு 100 முகக்கவசங்கள் இலவசமாக அளித்ததாக அவர்
தெரிவித்துள்ளார்.
மேலும், கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளர்கள்
பலருக்கும் முகக்கவசங்களை தயாரித்து வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாணவர் உதித் ககர் கூறுகையில், 'எனது வீட்டில் மூன்று 3டி
பிரிண்டர்கள் உள்ளன.
இதன் மூலமாக நாள் ஒன்றுக்கு 20 முதல் 25 முகக்கவசங்களை உருவாக்க முடியும்.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதனைச் செய்து வருகிறேன்.
தற்போது கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், சுகாதாரப்
பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு இன்றியமையாதவை. தேவைப்படும் மற்றவர்களும்
தயாரித்து வழங்கி வருகிறேன்' என்று தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...