கர்நாடகாவில் 7-ம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்பு (Online Class) நடத்த தடை
கர்நாடக
முதல்வர் எடியூரப்பா தலைமையில் நேற்று அமைச் சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில்
கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் பள்ளிகளை திறப்பது, தேர்வு நடத்துவது, ஆன்லைன்
வகுப்பு நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டத்துக்கு பின்
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் சுரேஷ் குமார் கூறியதாவது: கடந்த ஒரு வாரமாக கல்வித்
துறை நிபுணர்கள், மனநல மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத் துறை அதிகாரிகள்
உள்ளிட்டோருடன் பள்ளிகளை திறப்பது, ஆன்லைன் மூலம் பாடம் நடத்துவது குறித்து ஆலோசனை
நடத்தப்பட்டது. அமைச்சரவைக் கூட்டத்திலும் இதுகுறித்து விவாதித்து சில முடிவுகள்
எடுக்கப்பட்டன. ஆன்லைனில் பாடம் கற்பிப்பது என்பது மாணவர்கள் பள்ளிக்கு சென்று
வகுப்பறையில் பாடம் கவனிப்பது போன்றது அல்ல.இந்த திட்டத்தின் மூலம் மாணவர் களின்
நிலை, திறன் உள்ளிட்ட வற்றை ஆசிரியரால் அறிய முடி யாது. அதேபோல அனைத்து
மாணவர்களுக்கும் ஆன்லைனில் பங்கேற்கும் வசதியோ, தொழில் நுட்பமோ இல்லை. எனவே 7-ம்
வகுப்பு வரையி லான மாணவர்களுக்கு ஆன்லை னில் பாடம் நடத்துவதற்கு தடை
விதிக்கப்படுக்கிறது.
எனவே பள்ளி நிர்வாகங்கள் எக்காரணம் கொண்டும் மாணவர்களிடம்
கட்ட ணம் வசூலிக்கக்கூடாது. அதே போல கல்விக் கட்டணத்தை இந்த ஆண்டு உயர்த்தக்கூடாது.
எஸ்எஸ் எல்சி தேர்வு திட்டமிட்டபடி வரும் 25-ம் தேதி தொடங்கும் என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...