தந்தையரை போற்றும் வகையில்
‘எந்தை’ 7 நிமிட குறும்படம்
வினிஷா விஷன் வெளியீடு
சென்னையை சேர்ந்த விளம்பர ஏஜென்ஸியான வினிஷா விஷன் நிறுவனம், தந்தையர்
தினத்தை முன்னிட்டு ‘எந்தை’ என்ற 7 நிமிட குறும்படத்தை வெளியிட்டுள்ளது.
வினிஷா விஷன் அட்வர்டைஸ் மென்ட் ஏஜென்ஸியின் நிர்வாக இயக்குநரான
கே.வி.கதிரவன், டாக்டர் வினிஷா கதிரவன் பிரதான கதாபாத்திரத்தில்
நடித்துள்ளனர்.
விஜய் டி.குமார் இயக்கியுள்ள இப்படத்துக்கு சதீஷ் ஒளிப்பதிவும், குமார்
ஆன்லைன் எடிட்டிங்கும் செய்துள்ளனர். இசையமைப்பா ளர் கண்ணன் இசையமைத்துள்
ளார்.
இப்படம் குறித்து கே.வி.கதிரவன் கூறியபோது, ‘‘இது ஒரு நடுத்தர கிராமத்து விவசாயி குடும் பம் பற்றிய கதை. இயற்கையான
சூழல், ஆரோக்கிய உணவுமுறை யுடன் வாழ்க்கையை நகர்த்தும் அவர்கள்,
குழந்தைகள் கல்வி உள்ளிட்ட தேவைகளை எப்படி சமாளிக்கின்றனர் என்பதாக கதை
நகரும். பெரும்பாலும் தாயுடன் நெருங்கிப் பழகும் பிள்ளைகள், தந்தையிடம்
இருந்து விலகியே இருக்கின்றனர். தந்தையின் அய ராத உழைப்பு, தியாகத்தை இந்த 7
நிமிட குறும்படம் உணர்த்தும்.
தந்தையர் தினம் 21-ம் தேதி (இன்று) கொண்டாடப்படுவதை முன்னிட்டு, யூ-டியூப்
உள்ளிட்ட வலைதளங்களில் இப்படம் வெளி யிடப்பட்டுள்ளது’’ என்றார். இப்
படத்தின் கிரியேட்டிவ் ஹெட்டாக வும் அவர் பணியாற்றி உள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...