தமிழக முதல்வர் அவர்களுக்கு வணக்கம்!
நான்
நன்றாகச் சிந்தித்தே எழுதுகின்றேன்.
நீங்கள் நம் தமிழ்நாட்டைக் காக்கும் நடவடிக்கைகளில் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டாலும் கூட, நம் மக்களின் பொறுப்பற்ற தன்மையால் மனித உயிர்களின் வாழ்வு கேள்விக்குறியாக மாறத் தொடங்கியுள்ளது.
கொரோனா என்னும் கொடிய நோய்க்கு
இன்னும் மருந்து கண்டுபிடிக்காத சூழலில், இவ்வளவு தூரம் நம் அரசு எந்திரத்தைக் கொண்டு நீங்கள் போராடி வந்து கொண்டிருப்பது என்பது மாபெரும் போற்றுதலுக்குரியது.
1,10,100 எனத் தொடங்கிய தொற்றின் வேகம் இன்று
1000 என நாளுக்கு நாள்
கொரோனா தொற்றும்,
அதனுடன் சேர்த்து மரணமும் வேகமெடுக்கத் தொடங்கிவிட்டது..
நிலைமை நம் கைமீறிப் போவதற்குள் தாங்கள் மீண்டும் ஒரு நல்ல முடிவை உடனடியாக எடுக்க வேண்டும் எனப் பணிவுடன் வேண்டுகின்றேன். அது மீண்டும் அதிகக் கட்டுப்பாட்டுடன் கூடிய முழுமையான ஊரடங்கை அமல் செய்ய வேண்டும் என்பதே!
மத்திய அரசின் முடிவை எதிர்நோக்காமல், நம் மாநிலத்தின் சூழலைக் கருத்தில்கொண்டு நீங்கள் முடிவெடுங்கள்.
நாங்கள் உடனிருப்போம்.
தாமதிக்கும் ஒவ்வொரு கணமும்,
தவணைமுறையில் மரணம் நிகழும் என்னும் சூழல் நம்மைச் சூழ்வதற்குள் தாங்கள் ஒரு முடிவை அறிவியுங்கள். நாங்கள் உங்களோடு இணைந்து நிற்போம்.
எத்தனை நல்லது செய்தாலும்,சில விமர்சனங்கள் வந்துகொண்டேதான் இருக்கும். தமிழக மக்களை இன்றைக்கு உங்கள் ஒருவரால்தான் காக்க முடியும்.
உங்களால் மட்டுமே முடியும்.
ஆதரவற்ற மக்களுக்கும்,குழந்தைகளுக்கும் உணவளிக்க பள்ளிக்கூடங்களையும், ஆசிரியர்களையும் பயன்படுத்திக்கொள்ளுங்கள். அரசோடு இணைந்து நிற்க தயாராகவே இருக்கின்றோம்.
உடனடித் தேவை
மீண்டும் ஒரு முழுமையான ஊரடங்கு.
நீங்கள் மக்களுக்கான முதல்வராக இருப்பதால் மக்களில் ஒருவனாய் உங்களுக்குப் பணிவுடன் இக்கடிதத்தை அனுப்புகின்றேன்.
சி.சதிஷ்குமார்
அரசுப்பள்ளி ஆசிரியர்
புதுக்கோட்டை மாவட்டம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...