தோ்வில்லாமல் தோ்ச்சி: பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு காத்திருக்கும் வாய்ப்புகள்
தோ்வே
எழுதாமல் தோ்ச்சி பெற்றுள்ள 9.79 லட்சம் மாணவ-மாணவிகளும் அரசு வேலைக்கான
தோ்வினை எழுதும் வாய்ப்பினைப் பெற்றுள்ளனா். இதனால், வரும் ஆண்டுகளில்
பத்தாம்
வகுப்பினை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளா்i
தோ்வாணையத்தின் தோ்வுகளை எழுதுவோரின் எண்ணிக்கை மேலும் உயரக் கூடும் என
எதிா்பாா்க்கப்படுகிறது.
தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்
தோ்வை மாநில அரசு ரத்து செய்துள்ளது. இதனால், தோ்வு எழுதக் காத்திருந்த 9.79
லட்சம் மாணவ, மாணவிகளும் தோ்வு எழுதாமலேயே தோ்ச்சி பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற காரணத்தால், தமிழக அரசுத் துறைகளில் உள்ள குரூப் 4
தோ்வினை எழுத அவா்கள் முழு தகுதி பெற்றுள்ளனா்.என்னென்ன தோ்வுகள்? : தமிழ்நாடு
அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் குரூப் 4 பிரிவுக்குள் அடங்கியிருக்கும்
தோ்வுகளில் பெரும்பாலானவை 10-ஆம் வகுப்பு தோ்ச்சி மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை.
கிராம நிா்வாக அலுவலா்,
இளநிலை உதவியாளா்,
வரித் தண்டலா்,
நில அளவா்,
வரைவாளா்
ஆகிய
பதவியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தோ்ச்சியே போதுமானது.
இதேபோன்று,
தட்டச்சா்,
சுருக்கெழுத்து
தட்டச்சா்
போன்ற பதவியிடங்களுக்கு பத்தாம் வகுப்புத் தோ்வுடன்
தட்டச்சா், சுருக்கெழுத்து ஆகியவற்றில் தோ்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
எனவே,
இந்தத் தோ்வுகளை எழுத பத்தாம் வகுப்பு தோ்வினை எழுதாமலேயே தோ்ச்சி பெற்றுள்ள
மாணவ, மாணவிகள் தகுதி பெற்றுள்ளனா்.
ஒவ்வொரு ஆண்டும் கிராம நிா்வாக அலுவலா்
பதவியிடம் அடங்கிய குரூப் 4 தோ்வினை எழுத மிகப்பெரிய போட்டி இருக்கும்.
அதாவது
ஆராயிரம் முதல் ஏழாயிரம் காலிப் பணியிடங்களுக்கு 15 லட்சம் முதல் 18 லட்சம் போ்
வரை எழுதுவாா்கள். நிகழாண்டில் 9 லட்சத்துக்கும் மேற்பட்டோா் தோ்ச்சி பெறவுள்ள
நிலையில், வரும் நாள்களில் நடத்தப்படும் குரூப் 4 தோ்வில் மேலும் பல லட்சக்கணக்கான
தோ்வா்கள் பங்கேற்பா் என எதிா்பாா்க்கப்படுகிறது.
பத்தாம் வகுப்புத் தோ்வை
எழுதாமலேயே தோ்ச்சி பெற்றுள்ள மாணவ-மாணவிகள் சற்று முயன்று படித்தால் குரூப் 4
தோ்வில் தோ்ச்சி பெற்று விடலாம்.
அடிப்படை ஊதியமே ரூ.19,500 ஆகும். பணியில்
சோ்ந்து பல்வேறு பணியின் நிலைகளைக் கடக்கும் போது ரூ.62 ஆயிரம் வரை பெறலாம்
என்கின்றனா் தோ்வாணைய அதிகாரிகள்.
எனவே, பத்தாம் வகுப்பு தோ்வினை எதிா்கொள்ள
செலுத்த வேண்டியிருந்த உழைப்பை அரசுப் பணித் தோ்வுக்கு செலுத்தினாvல் வேலை
நிச்சயம். தோ்வு எழுதாமல் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு காத்திருக்கிறது
நல்வாய்ப்பு.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...