NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பொதுத்தேர்வு ரத்து - அரசு செய்ய வேண்டியது என்ன?


தமிழகம் எப்போதுமில்லாத பேரிடர் காலத்தின் சிக்கியிருக்கிறது. கொரோனா தொற்று பரவி வரும் இச்சமயத்தில் , குழந்தைகளின் உயிரைக் கருத்தில் கொண்டு , தமிழக அரசு 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை ரத்து செய்துள்ளது. மாணவர் நலன் சார்ந்து எடுத்துள்ள அரசின் முடிவை மகிழ்ச்சியுடன் அனைவரும் வரவேற்கிறோம். அதே சமயத்தில் , கல்வி முறையின் அடுத்த நகர்வு குறித்தும் அரசு பரிசீலிக்க வேண்டும் . நீண்ட காலமாக நம்மிடையே நிலவி வரும் , மதிப்பெண் சார்ந்த தேர்வு முறைக்கான மாற்று முறையைக் கையிலெடுக்கும் கட்டாயமும் அவசியமும் இப்போது ஏற்பட்டுள்ளது.

திறன்கள் அடிப்படையில் மாணவரை மதிப்பீடு செய்யும் நடைமுறையான CCE முறை தான் ( Continuous and Comprehensive Evaluation - தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை ) மதிப்பெண்கள் சார்ந்த தேர்வுகளுக்கான சிறந்த மாற்றாக அமையும். தேசியக் கலைத்திட்டம் 2005 இன் ( என்சி எஃப் - 2005 ) பரிந்துரைப் படி , கடந்த 8 ஆண்டுகளாக பள்ளிகளில் இந்த சிசிச முறை ( தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை ) நடைமுறையில் உள்ளது. இம்முறை ஏற்கனவே 9 ஆம் வகுப்பு வரை பின்பற்றப்படுகிறது. இதே முறையை 10 ஆம் வகுப்பிற்கும் இனி வரும் காலங்களில் நீட்டிக்கலாம்.

அப்படிச் செய்தால் , அது பொதுத் தேர்வு என்ற இறுக்க மனநிலையை உடைத்து மாணவர்களின் சுதந்திரமான மகிழ்ச்சியான கற்றலுக்கு வழி வகுக்கும். அதே போல , வாழ்வியல் சார்ந்த சமூகத்தைப் புரிந்து கொள்ளும் கல்வியைக் கற்றுத்தரும் களமாகப் பள்ளிகள் மாற்றம் பெற வேண்டும். மேல்நிலைக் கல்வியில் பயிலும் பாடப் பிரிவுகள் சம வாய்ப்பு முறையில் பரவலாக்கப்பட வேண்டும். தமிழகத்தின் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் , விவசாயம் , தொழிற்கல்வி , அறிவியல் , கணக்கு , அரசியல் , வரலாறு , புவியியல் , இலக்கியம் , இசை .. என ஏராளமான துறைகளை உருவாக்கிட வேண்டும். விரும்பும் பாடப் பிரிவுகளைத் தேர்வு செய்யும் உரிமை எல்லாக் குழந்தைகளுக்கும் கிடைக்க இது வழிவகுக்கும் . கொரோனா காலம் , இவ்வாறான கல்விச் சீரமைப்புக் காலமாக மாற்றம் பெறுவதுதான் சரியானதாக இருக்கும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive