NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

முதல் சூரிய கிரஹணம் வானில் நிகழ்ந்த அதிசயம்

இந்த ஆண்டிற்கான முதல் சூரிய கிரஹணம், நேற்று நிகழ்ந்தது. தமிழகத்தில், இது பகுதி கிரஹணமாக காட்சியளித்தது; 'ஆன்லைன்' வாயிலாக ஏராளமானவர்கள் கண்டு ரசித்தனர். இந்த ஆண்டின் முதல் சூரிய கிரஹணம், நேற்று நிகழ்ந்தது. நெருப்பு வளையமாக காட்சியளித்த, முழு சூரிய கிரஹணத்தை, ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, உத்தரகண்ட் மாநிலங்களில், மக்கள் கண்டு ரசித்தனர்.
மேலும், மத்திய ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, சீனாவின் தெற்கு பகுதிகளிலும் முழு கிரஹணத்தை பார்க்க முடிந்தது.தமிழகத்தை பொறுத்தவரை, அதிகபட்சமாக, சென்னையில், 34 சதவீதம் சூரியனை, நிலவு மறைத்து சென்றது.
சென்னையில், காலை, 10:22க்கு துவங்கி, பகல், 11:58 மணிக்கு உச்சம் பெற்று, மதியம், 1:41க்கு முடிந்தது.ஊரடங்கு காரணமாக, சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கில், பொது மக்கள் பார்க்க ஏற்பாடு செய்யப்படவில்லை. இருப்பினும், சூரிய கிரஹணத்தை பார்க்க, ஆர்வமாக இருந்தவர்கள், சிறப்பு கண்ணாடிகள் வாயிலாக கண்டு ரசித்தனர்.மேலும், பலர் இணையதளத்தில் நேரலையாக, வீட்டில் இருந்தபடி, தங்களுக்கு விருப்பப்பட்ட இடங்களை தேர்வு செய்து பார்த்தனர்.கிரஹணம் உச்சம் பெற்ற நிலையில், பலர் வீடுகளிலேயே தர்ப்பணம் செய்தனர். கிரஹணம் முடிந்ததும், குளித்து, வீட்டை சுத்தம் செய்த பின் பூஜை செய்தனர்; பின், சமைத்து உண்டனர். ஒரு சிலர், வீட்டிற்கு அருகில் உள்ள கோவிலுக்கு சென்று, கோபுர தரிசனம் செய்தனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive