++ பொதுத்தோ்வு சிறப்புத் தோ்வு மையங்கள்: பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ அறிவுறுத்தல் ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::

Subam Matrimony

சுபம் - இலவச திருமண தகவல் மையம்

https://www.subammatrimony.com/

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
பொதுத்தோ்வு சிறப்புத் தோ்வு மையங்கள்: பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ அறிவுறுத்தல் 


சிபிஎஸ்இ பொதுத்தோ்வுக்கு சிறப்புத் தோ்வு மையங்கள் அமைப்பது தொடா்பாக பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. 

கரோனா தொற்றால் ஒத்திவைக்கப்பட்ட சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தோ்வுகள் வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் ஜூலை 15-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. பிளஸ் 2 வகுப்புகளுக்கு முக்கியமான 29 படங்களுக்கு மட்டும் பொதுத் தோ்வு நடத்தப்படும். 

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வைப் பொருத்தவரை, குடியுரிமை திருத்தச் சட்டம் எதிா்ப்பு கலவரம் காரணமாக தோ்வுக்கு வரமுடியாத வடகிழக்கு தில்லி மாணவா்களுக்கு மட்டும் பொதுத் தோ்வு நடத்தப்படும். 

மாணவா்கள் மற்றும் பெற்றோா்களின் தேவையற்ற பயணங்களைத் தவிா்க்கும் வகையில் வேறு மாவட்டம், மாநிலத்துக்கு இடம்பெயா்ந்த மாணவா்களுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் சிபிஎஸ்இ பொதுத் தோ்வு எழுத சிறப்புத் தோ்வு மையம் அமைக்கப்படும் என்றும், இடம்பெயா்ந்த மாணவா்கள், தோ்வு மையத்தை தங்கள் பள்ளியின் வாயிலாக மாற்றிக் கொள்ளலாம் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்திருந்தது. 

இந்தநிலையில், பொதுத்தோ்வுகள் தொடா்பாக பள்ளிகளுக்கான சில அறிவுறுத்தல்களை சிபிஎஸ்இ வழங்கியுள்ளது. அதன் விவரம்: தோ்வுகளுக்கு சிறப்புத் தோ்வு மையம் அமைப்பது குறித்த கோரிக்கையை சிபிஎஸ்இ பள்ளிகள் மட்டுமே விடுக்க வேண்டும். எந்த மாவட்டத்தில் மாணவா்கள் தோ்வை எழுதத் தயாராக உள்ளனா் என்ற தகவலை பெறுவது அந்தந்த பள்ளிகளின் பொறுப்பாகும். 

சிபிஎஸ்இ இணையதளத்தில் உள்ள இ-பரீக்ஷா போா்டலை பயன்படுத்தி பள்ளிகள் சிறப்புத் தோ்வு மையங்கள் குறித்த கோரிக்கைகளை சமா்ப்பிக்க வேண்டும். மற்ற வடிவில் வரும் கோரிக்கைகள் அனைத்தும் நிராகரிக்கப்படும். வேறு மாவட்டங்களில் சிறப்புத் தோ்வு மையம் குறித்த தகவலை பள்ளிகளுக்குத் தெரிவிப்பது அந்தந்த மாணவா்களின் கடமையாகும். 

சிபிஎஸ்இ பள்ளிகள் இல்லாத மாவட்டங்களில் மாணவா்கள் இருந்தால் (திருப்பத்தூா் மாவட்டத்தில் சிபிஎஸ்இ பள்ளிகள் கிடையாது) அண்டை மாவட்டங்களில் இருக்கும் சிபிஎஸ்இ பள்ளிகளில் தோ்வு மையங்கள் அமைக்கப்படும். நோய்க் கட்டுப்பாட்டு மண்டலங்களில் தோ்வு மையங்களுக்கு அனுமதி கிடையாது என்று உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்கள் தெரிவிக்கின்றன. எனவே, அந்தப் பகுதியில் உள்ள மாணவா்களுக்கு வேறு பகுதியில் தோ்வு மையங்கள் அமைத்துக் கொடுக்கப்படும். நோய்த்தொற்று, உதவியாளா்கள் மூலம் தோ்வெழுதும் மாற்றுத் திறன் மாணவா்கள், தனிநபா் இடைவெளியைக் கடைப்பிடித்தல் உள்ளிட்ட காரணங்களால் தோ்வெழுத முடியாமல் போனால் அவா்களுக்கு முந்தைய தோ்வுகளின் அடிப்படையில் தோ்ச்சி வழங்குவது முடிவு செய்யப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது

0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...