தங்கம் விலை உயர்வு (Gold Rate)
தங்கம் ஒரு பவுன் மீண்டும் ரூ.36 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை நேற்று ஒரே
நாளில் பவுனுக்கு ரூ.224 உயர்ந்து ரூ.36,208-க்கு விற்கப்பட்டது. உலக நாடுகளில்
கரோனா வைரஸ் வேக மாக பரவி வருவதால், பொருளாதார வளர்ச்சி குறையத்
தொடங்கியுள்ளது.இதையொட்டி, தொழில் துறை, சேவைத் துறை, ஏற்றுமதி, இறக்குமதி உள்ளிட்ட துறைகளின்
வளர்ச்சி வீதம் குறையத் தொடங்கியுள்ளன. இதனால், முதலீட்டாளர்களும், பொதுமக்களும்
தங்கத்தில் முதலீட்டைத் தொடங்கி விட்டனர். ஊரடங்கால் நகைக் கடைகளில் கூட்டம்
இல்லாதபோதிலும், பங்குச் சந்தையில் தங்கம் சார்ந்த முதலீடுகள் அதிகரித்து
வருகின்றன.இதனால், தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 2 வாரங்களுக்குப்
பிறகு 22 கேரட் தங்கம் ஒரு பவுன் மீண்டும் ரூ.36 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
சென்னையில் 22 கேரட் தங்கம் நேற்று பவுனுக்கு ரூ.224 உயர்ந்து ரூ.36,208-க்கு
விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.4,526-க்கு விற்பனை ஆனது.
இதுவே, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.4,498-க்கு விற்கப்பட்டது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...