மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு அக்டோபர் 4 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2020-21ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு மே 31 ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில் கொரோனா காரணமாக, நாடு தழுவிய கட்டுப்பாடுகளின் மூன்றாம் கட்டத்திற்குப் பிறகு நிலைமையை மறு ஆய்வு செய்யத பின் ஜூன் 5 ஆம் தேதி யுபிஎஸ்சி பரீட்சைகளின் திருத்தப்பட்ட அட்டவணை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகும் என மத்திய அரசு தெரிவித்தது.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட, மத்திய அரசு பணிகளுக்கான தேர்வை, மத்திய பணியாளர் தேர்வாணையம், ஆண்டு தோறும் நடத்துகிறது. இதன்படி, இந்தாண்டுக்கான, முதன்மை தேர்வு, வரும், 31-ஆம் தேதி நடைபெறும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதை அடுத்து, முதன்மை தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது மீண்டும் தேர்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தேர்வு நடைபெறும் நாள் விவரங்கள்;
* பொறியியல் சேவைகள் தேர்வு: 05.01.2020
* ஒருங்கிணைந்த புவி விஞ்ஞானி தேர்வு: 19.01.2020
* யு.பி.எஸ்.சி ஆர்டி / தேர்வு: 19.01.2020
* சி.டி.எஸ். தேர்வு (1) : 02.02.2020
* யு.பி.எஸ்.சி ஆர்டி / தேர்வு; 23.02.2020
* CISF AC (EXE) LDCE: 01.03.2020
* யு.பி.எஸ்.சி ஆர்டி / தேர்வு: 08.03.2020
* என்.டி.ஏ. & N.A. தேர்வு (I): 06.09.2020
* சிவில் சர்வீசஸ் தேர்வு: 04.10.2020
* இந்திய வன சேவை தேர்வு, சிஎஸ் (பி) தேர்வு: 04.10.2020
* I.E.S./I.S.S. தேர்வு: 16.10.2020
* ஒருங்கிணைந்த புவி-விஞ்ஞானி (முதன்மை) தேர்வு: 08.08.2020
* பொறியியல் சேவைகள் (முதன்மை) தேர்வு: 09.08.2020
* ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள் தேர்வு: 22.10.2020
* மத்திய ஆயுத போலீஸ் படைகள் (ஏசி) தேர்வு: 20.12.2020
* என்.டி.ஏ. & என்.ஏ. தேர்வு (II): 06.09.2020
* சிவில் சர்வீசஸ் (முதன்மை) தேர்வு: 08.01.2021
* சி.டி.எஸ். தேர்வு (II): 08.11.2020
* இந்திய வன சேவை (முதன்மை) தேர்வு: 28.02.2021
* S.O./Steno (GD-B / GD-I) LDCE: 12.12.2020
* யு.பி.எஸ்.சி ஆர்டி / தேர்வு: 20.12.2020
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...